நாடாளுமன்றத்தில் ஹுடுட்மீது கொண்டுவரப்படும் தனி உறுப்பினர் சட்டவரைவு நிராகரிக்கப்பட்டாலும் அம்முடிவை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாக இருப்பதாய் பாஸ் அறிவித்துள்ளது. பாஸ், நாட்டின் ஜனநாயகக் கோட்பாடுகளை மதிக்கும் ஒரு கட்சி என அதன் தகவல் பிரிவுத் தலைவர் மாபுஸ் ஒமார் கூறினார்.
கிளந்தானில், இஸ்லாமிய சட்டமான ஹுடுட்டைக் கொண்டுவரும் தனது நோக்கம் நிறைவேற வேண்டும் என்று பாஸ் விரும்பினாலும் அதை ஜனநாயக வழியிலேயே சாதிக்க விரும்புகிறது என்றாரவர்.
“அதனால்தான் இந்தச் சட்டவரைவைத் தாக்கல் செய்ய கிளந்தானுக்கு வாய்ப்பளியுங்கள் என மக்களைக் கேட்டுக்கொள்கிறோம்”, என இன்று காலை செய்தியாளர் கூட்டமொன்றில் மாவுஸ் கூறினார்.


























ஜனநாயக முறைப்படி இந்த கோரிக்கை நியாயமானதே.. இருப்பினும், தேசிய உச்ச அரசியலமைப்பு சட்டத்தை அறிந்து உணர்ந்து மதித்து செயல்படுவது சிறப்பு…!!!!!
இவர்கள்தான் கூறினார்கள், கர்பால் தான் ஹுடுட்டை எதிர்கிறார் என்று, இப்போது கர்பால் மறைந்து விட்டார், அப்போ ஹுடுட்?