ஜாஹிட்: ஹுடுட் விசயத்தில் பாஸ் மலாய்க்காரர்களை ஏமாற்றியதா?

zahidபாஸ்  ஹுடுட்  அமலாக்கத்தில்  உண்மையிலேயே  அக்கறை  கொண்டிருக்கிறதா  என  அம்னோ  உதவித்  தலைவரும்  உள்துறை  அமைச்சருமான  அஹ்மட் ஜாஹிட்  ஹமிடி  கேள்வி  எழுப்பியுள்ளார். அது  ஒரு   “அரசியல்  தந்திரம்”  எனக்  கூறப்பட்டிருப்பதை  அடுத்து  அவர்  இவ்வாறு  வினவினார்.

பாஸ்  மலாய்  ஆதரவுத் தளத்தை  வலுப்படுத்திக்கொள்ளவே  அந்த  நடவடிக்கையை  மேற்கொண்டிருக்கிறது  என  டிஏபி-இன்  சிபூத்தே  எம்பி  தெரேசா  கொக்  மலேசியாகினியிடம் கூறியதை  வைத்து  அஹ்மட்  ஜாஹிட்  அவ்வாறு  கேட்டார்.

“அது  உண்மையானால், மலாய்க்காரர்  ஆதரவைத்  தன்  பக்கம்  இழுக்க பாஸ்  மலாய்க்காரர்களை  ஏமாற்றி  வந்துள்ளது”,என்றாரவர்.