‘அன்வார் எவ்வளவு விரைவில் சிறைக்குப் போகிறாரோ அவ்வளவுக்கு நல்லது’

முன்னாள்  துணைப்  பிரதமரான  அன்வார்  இப்ராகிம், ஏதாவது  தொல்லை  தந்துகொண்டே இருப்பார்  என்பதால்  அவர் விரைவில்  சிறைக்குAnwar - Ibrahim Ali  அனுப்பப்படுவது  மக்களுக்கும்  நாட்டுக்கும்  நல்லது  என்று  பெர்காசா  தலைவர்  இப்ராகிம்  அலி  கூறினார்.

இரண்டாவது  குதப்புணர்ர்சி  வழக்கும்  தண்டனையும்  தம்மை  ஒழித்துக்கட்டும்  அரசியல்  தந்திரம்  என்று  அன்வார்  கூறிக்கொள்வதை  அபத்தம்  என்றாரவர்.

“ஒரே   வாதத்தை  (பிரதமர்) நஜிப்பும்  ரோஸ்மாவும்  சிறைக்கு  அனுப்ப  முயல்கிறார்கள், கொடுமைப்படுத்துகிறார்கள், நியாயம்  தவறும்  நீதிபதிகள், சதித்  திட்டம்  என்பதையே  திரும்பத்  திரும்பச்  சொல்கிறார்.

“எந்த  விவகாரம்  ஆனாலும்,  அரசியல்  ஆதாயம்  அளிக்கும்  எனத்  தெரிந்தால்  அதைப்  பயன்படுத்திக்  கொள்வார்”,  என்று  இப்ராகிம்  அலி  கூறினார்.