நோர்வேயில் ஹுடுட் இருந்தால், அதைக் காண்பித்து ஆதரவு பெறுவது எளிதாக இருக்கும்

hududஹுடுட்டைப்  பின்பற்றும்  நாடுகள்  “தோல்வியுற்ற  நாடுகளாக” இல்லாமல் இருந்தால்  கிளந்தானில் அச்சட்டத்தை  அமல்படுத்துவதற்கு  ஆதரவு  திரட்டுவது  எளிதாக  இருந்திருக்கும்  என  பாஸ்  செப்பாங்  எம்பி  ஹனிபா  மைடின்  கூறினார்.

நோர்வே  போன்ற  நாட்டில்   ஹுடுட்  அமலில்  இருந்தால்  நன்றாக  இருந்திருக்கும்.

“ஆனால், (ஹுடுட்  அமலாக்கம்  உள்ள  நாடுகளுக்கு) பாகிஸ்தான்  போன்றவைதான்  எடுத்துக்காட்டாக  உள்ளன. அதுவோ  தோல்வியுற்ற  ஒரு  நாடு”. நேற்று,  கோலாலும்பூர், சிலாங்கூர்  சீன  அசெம்ளி  மணடபத்தில் நடைபெற்ற ஹுடுட்  மீதான  கருத்தரங்கில்  ஹனிபா  இவ்வாறு  கூறினார்.

ஆனாலும், கிளந்தானில்  ஹுடுட்டை  அமல்படுத்த  மாநில  பாஸ்  அரசுக்கு  ஒரு  வாய்ப்பைக்  கொடுக்க  வேண்டும்  என  அவர்  கூட்டத்தாரைக்  கேட்டுக்கொண்டார்.