ஹுடுட் அமலாக்கத்தில் பாஸ் தொடர்ந்து பிடிவாதமாக இருந்தால், பக்காத்தான் ரக்யாட் கூட்டணி பலவீனமடையும், “அடுத்த 50 ஆண்டுகளுக்கு” அம்னோ ஆட்சியை அசைக்க முடியாது என்று எச்சரித்துள்ளார் இஸ்லாமிய மறுமலர்ச்சி முன்னணி இயக்குனர் டாக்டர் பாருக் மூசா.
“நாட்டில் ஆட்சிமாற்றத்துக்காக கடுமையாக பாடுபட்டு வந்திருக்கிறோம். ஆனால், இந்த ஒரு விவகாரத்தால் அம்னோதான் அடுத்த 50 ஆண்டுகளுக்குத் தொடர்ந்து ஆளப்போகிறது”, என்று பாருக் நேற்று ஹுடுட் மீதான கருத்தரங்கில் உணர்ச்சிவசப்பட்டுப் பேசினார்.
கிளந்தானில் ஹுடுட் செயல்படுத்தப்படுவதை ஆதரிப்பதாக கூறி அம்னோ “தூண்டில்” போடுகிறது என்றும் பாஸ் அதற்குப் பலியாகக் கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.
பாஸ், கிளந்தான் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியை நிலை நிறுத்த ஆவன செய்கிறது. இல்லையேல், வரும் பொதுத்தேர்தலில் பாசின் நிலைமை அம்போதான்…!!!! பாசின் ஹூடுத் நோக்கத்துக்கு அம்னோவின் உண்மை நிலைப்பாட்டினை வெளிச்சமாக்கவே இந்த முயற்சி…!!!!! தேசிய அரசியலமைப்பை மீறி தைரியமாக அம்னோ தலைவரோ, அமைச்சர்களோ அல்லது அம்னோ பிரதிநிதிகளோ இந்த ஹூடுத் திட்டத்துக்கு முழு ஆதரவு கொடுப்பார்களா என்று பொறுத்திருந்து பார்க்கவேண்டும் !!!
hudud 1400 வருடத்தின் முன்பு தோற்று வைக்கப்பட்ட சட்டம் ! இது ……. நோயாளிகளின் முயற்சி ! இது என் கருத்து !