அரசுப் பணியாளர்கள், மன்னருக்கும் நாட்டுக்கும் மட்டும்தான் விசுவாசமாக இருக்க வேண்டும்

azizzபொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)- எதிர்ப்புப்  பேரணியில்  கலந்துகொண்ட  அரசுப் பணியாளர்கள்  துரோகிகள்  என்று   குறிப்பிடப்பட்டிருப்பதை  அரசமைப்புச்  சட்ட  நிபுணர்  ஒருவர்  சாடியுள்ளார். அவர்களைக்  கட்டுப்படுத்தும்  விசுவாச  உறுதிமொழி  அரசமைப்புக்குப்  புறம்பானது  என்றாரவர்.

அரசுப்  பணியாளர்கள்  ஆட்சியில்  உள்ள  அரசாங்கத்துக்கு  விசுவாசமாக இருக்க  வேண்டும்  என்ற  அவசியமில்லை  என அப்துல்  அசீஸ்  பாரி  கூறினார். அரசாங்கக்  கொள்கைகளை  செயல்படுத்துவதுதான்  அவர்களின்  வேலை. “அக்கொள்கைகள்  சட்டத்துக்கு உட்பட்டவையாக  இருக்க  வேண்டும்”,  என்றும்  அவர்  சொன்னார்.

“அரசமைப்பின்  பகுதி  132(1), ஆயுதப்படை, போலீஸ் படை  உள்பட   அரசுப்  பணியாளர்கள்  மன்னருக்கும்  நாட்டுக்கும்  மட்டுமே  விசுவாசமாக இருப்பது  அவசியம்  என்பதை  வலியுறுத்துகிறது”,  என்று  அசீஸ்  கூறினார்.