மலேசியா ஒரு சமயச் சார்பற்ற கூட்டரசாக 1963 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்டது. அந்த ஏற்பாட்டின் முழு அமைப்பையும் மீண்டும் பேச்சுவார்த்தையின் வழி மாற்றாத வரையில் ஹூடுட் சட்டத்தை மாநில அளவில் அமல்படுத்துவது மலேசிய அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானதாகும் என்று 60 சிவில் சமூக அமைப்புகள் நேற்று ஊடகங்களுக்கு விடுத்த ஓர் அறிக்கையில் கூறியுள்ளன.
இத்ததைய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு விவகாரத்தை கூட்டரசு நாடாளுமன்றத்தில் ஒரு தனிப்பட்ட உறுப்பினரின் மசோதா வழி அல்லது எந்த ஒரு மாநில சட்டமன்றத்தின் வழியாகக்கூட கையாளப்படுவது முழுமொத்தத்தில் தவறானதும் முறையற்றதுமாகும் என்று கூறிய அந்த அமைப்புகள் இந்த விவகாரத்தில் அவற்றின் கீழ்க்கண்ட நிலைப்பாட்டை வெளியிட்டன:
1. மலாயா, சாபா, சரவாக் மற்றும் அன்றைய சிங்கப்பூர் ஆகியவை ஒன்றிணைந்து 1963 ஆம் ஆண்டில் மலாயா அரசமைப்பு சட்டத்தை புதிய கூட்டரசு (Federation) அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படையாக ஏற்றுக்கொண்டதன் வழி மலேசியா உருவாக்கப்பட்டது. செயல்முறையில், மலேசியா ஒரு சமயச் சார்பற்ற நாடு என்று கருதப்பட்டது.
2. மலாயா மற்றும் மலேசியா ஆகிய இரண்டின் அரசமைப்புச் சட்டங்களின் அட்டவணை 9 தின் கீழ் “சிவில் மற்றும் கிரிமினல் சட்டங்கள், அவற்றின் நடைமுறைகள் மற்றும் நீதி பரிபாலனம் ஆகியவை கூட்டரசு ஆட்சியின் அதிகாரத்திற்குட்பட்டதாக தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளன.” இதிலிருந்து விதிவிலக்களிக்கப்பட்டிருப்பது (Item 4) இஸ்லாமிய தனிப்பட்ட விவகாரச் சட்டங்கள்.
3. மத்திய ஆளுமைக்கு 9 ஆவது அட்டவணை அளித்திருக்கும் அதிகாரம் காரணமாக, குறிப்பாக நீதி பரிபாலனம் போன்றவை, அதற்கு மாற்றங்கள் செய்ய வேண்டுமென்றால் முழுமொத்த கூட்டரசு ஏற்பாடுகளையும் தளர்த்துவதற்கான முழு ஆய்வையும் மேற்கொள்ள வேண்டுமேயன்றி தனிப்பட்ட ஒன்றைப் பற்றியதாக இருக்கக்கூடாது.
4. கூட்டரசு ஏற்பாடுகள் பற்றிய எந்த ஒரு மறுபேச்சுவார்த்தையிலும், சாபாவும் சரவாக்கும் 1963 இருந்தது போல் கூட்டான மாலாயா மாநிலங்களுக்குச் சமமான பங்காளியாக நடத்தப்பட வேண்டும், பதிமூன்றில் வெறும் இரண்டு என்றல்ல.
5. ஹூடுட் சட்டத்தின் தாக்கம் முஸ்லிம்களை மட்டும் சாறும் என்றல்ல. அதன் மீறிய தாக்கம் அனைத்து மலேசியர்களையும் பாதிக்கும். எனவே, ஹூடுட் சட்டத்தை அறிமுகப்படுத்தும் எந்தத் திட்டமும் அனைத்து இன, சமய மலேசியர்களின் பொது விவாதத்திற்கும் கலந்துரையாடலுக்கும் உட்படுத்தப்பட வேண்டியது அவசியமாகிறது.
6. தற்போதைய ஷரியா சட்டங்கள் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவகாரங்கள் சம்பந்தப்பட்டதால், அது முஸ்லிம்களை மட்டுமே சம்பந்தப்படுத்துவதாகும். ஆனால், நடைமுறையில் முஸ்லிம் அல்லாதவர்களும் மத மாற்றம் மற்றும் குழந்தைகள் பராமரிப்பு போன்றவற்றால் கடுமையாகப் பாதிக்கப்படுகின்றனர். இது நீதியை வலியுறுத்தும் இஸ்லாத்திற்கு முரண்பாடான தோற்றத்தை அளிக்கிறது இதனால், ஹூடுட்டின் தாக்கம் இன்னும் கடுமையானதாக உணரப்படும்.
7.ஹூடுட் சட்டத்தை அறிமுகப்படுத்த விரும்பும் எந்த ஒரு மாநில அரசுக்கும், கட்சிக்கும் அனைத்து மலேசியர்களையும் – முஸ்லிம் மற்றும் முஸ்லிம் அல்லாதவர்கள் – கலந்து ஆலோசித்து பல்லினக் கலாச்சார சமுதாயத்தில் ஹுடுட் சட்டத்தின் நன்மைகள் குறித்து அவர்களை நம்ப வைக்க வேண்டிய கடப்பாடு இருக்க வேண்டும். அது, ஹூடுட் சட்டம் – பல்வேறு விதமானவை – அமலாக்கம் செய்யப்பட்டிருக்கும் சவூதி அரேபியா, பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தான், சூடான், இந்தோனேசியாவின் ஆச்சே மற்றும் நைஜீரியாவின் 12 ஷரியா மாநிலங்கள் மீதான ஒரு சுயேட்சையான ஆய்வை மேற்கொள்வதற்கான நடவடிக்கையுடன் தொடங்கலாம்.
8. மலேசியாவில் எந்த ஒரு விவகாரத்தின், ஹூடுட் சட்டம் உட்பட, சிறப்பு அல்லது அதன் சிறப்பின்மை மீது கவனம் செலுத்தலாம் என்றாலும், எக்கருத்தையும் பெரும்பான்மையினரின் ஆதிக்கம் வழி சிறுபான்மையினர் மற்றும் மாறுபட்ட கருத்தைக் கொண்டவர்கள் மீது திணிக்கக்கூடாது. தற்போது, இது குறித்து ஆழ்ந்து, கற்றறிந்த அடிப்படையில் சிந்திப்பதற்கு மற்ற நாடுகளில் அமல்படுத்தப்பட்டிருக்கும் ஹூடுட் சட்டங்கள் மீதான துல்லியமான ஆய்வுகள் இல்லாததால், நாங்கள் ஹூடுட் சட்டம் அமலாக்கப்படுவதற்கு வகைசெய்யும் பொருட்டு மலேசிய அரசமைப்புச் சட்டத்தைத் திருத்த மேற்கொள்ளப்படும் எந்த ஒரு நடவடிக்கையும் எதிர்க்கிறோம்.
ஹூடுட் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள 60 அரசார்பற்ற அமைப்புகளின் பட்டியல்:
- All Women’s Action Society (AWAM) 妇女行动组织
- Anak Muda Sarawak (AMS) 砂拉越青年之子
- Angkatan Warga Aman Malaysia (WargaAMAN) 马来西亚和平力量组织
- Association of Women Lawyers (AWL) 女律师组织
- BARAMKINI 反巴兰水坝网络
- Centre for Malaysian Chinese Studies (CMCS) 华社研究中心
- Centre for Orang Asli Concerns (COAC) 原住民关怀中心
- Community Action Network (CAN) 社区行动网络
- ENGAGE 社区参与网络
- Federated TeoChew Associations of Malaysia (FTCAM) 马来西亚潮州公会联合会
- Federation & Alumni Associations Taiwan University, Malaysia (FAATUM) 马来西亚留台校友会联合总会
- Federation of Hainan Association Malaysia(FHAM)马来西亚海南会馆联合会
- Federation of Malaysian Indian Organization (PRIMA) 马来西亚印裔组织联合会
- Friends of Kota Damansara (FoKD) 哥打达曼沙拉之友
- Global Bersih (GB) hangqiu全球净选盟
- Islamic Renaissance Front (IRF) 回教复兴前线组织
- Japan Graduates Association, Malaysia (JAGAM) 马来西亚留日同学会
- Jaringan Orang Asal Semalaysia (JOAS) 全马原住民网络
- Komunite Seni Jalan Telawi (KsJT) Telawi社区艺术
- Kuala Lumpur and Selangor Chinese Assembly Hall (KLSCAH) 吉隆坡暨雪兰莪中华大会堂
- Kumpulan Aktivis Mahasiswa Independent (KAMI) 独立学生活跃份子组织
- Lingkaran Islam Tradisional (LIT) 伊斯兰传统圈
- LLG Cultural Development Centre (LLG) 林连玉基金
- Majlis Perundingan Malaysian Agama Buddha, Kristian, Hindu, Sikh dan Tao (MCC BCHST) 马来西亚五大宗教理事会
- Malaysia Youth &Student Democratic Movement (DEMA) 马来西亚青年与学生民主运动
- Malaysia-China Chamber of Commerce (MCCC) 马来西亚-中国总商会
- Malaysian Indian’s Progressive Association (MIPAS) 马来西亚印裔进步组织
- Malaysian Youth Care Association (PRIHATIN) 马来西亚青年关怀组织
- Malaysians for Beng Hock (M4BH) 全民挺明福
- Merdeka University Berhad 独立大学有限公司
- Nanyang University Alumni Association Malaya (Nanda)马来西亚南洋大学校友会
- National Indian Rights Action Team (NIAT) 全国印裔权益行动组织
- Negeri Sembilan Chinese Assembly Hall (NSCAH) 森美兰中华大会堂
- Oriental Hearts and Mind Study Institute (OHMSI) 东方思想研究中心
- Partners for Community Organization Sabah (PACOS) 沙巴社区伙伴信托组织
- Penang Chinee Town Hall (PCTH) 槟州华人大会堂
- People Service Organization (PSO) 人民服务组织
- Perak Women for Women Society (PWW) 霹雳妇女协会
- Persatuan Aliran Kesedaraan Negara (ALIRAN)国民醒觉组织
- Persatuan Alumni PBTUSM KL & Selangor ( PBTUSM KL&S)雪隆理华同学会
- Persatuan Bekas Siswazah Universiti dan Kolej di China, Malaysia (LiuHua) 马来西亚留华同学会
- Persatuan Guangxi Malaysia 马来西亚广西总会
- Persatuan Kesedaran Komuniti Selangor (EMPOWER) 雪兰莪社区自强学会
- Persatuan Masyarakat Selangor dan Wilayah Persekutuan (PERMAS) 雪隆社区协会
- Persatuan Promosi Hak Asasi Manusia (PROHAM)人权促进组织
- Persatuan Sahabat Wanita Selangor (PSWS) 雪兰莪妇女之友学会
- Project Dialogue (PD) 对话论坛圈
- Pusat Komunikasi Masyarakat (KOMAS) 社区传播中心
- Sahabat Rakyat Working Committee (SRWC) 人民之友工委会
- Save Sarawak River (SSR) 拯救砂拉越河流
- Saya Anak Bangsa Malaysia (SABM) 马来西亚之子
- Sister in Islam (SIS) 回教姐妹
- Suara Rakyat Malaysia (SUARAM) 大马人民之声
- Tamil Foundation (TF) 淡米尔基金会
- Tindak Malaysia (TM) 马来西亚行动组织
- United Chinese School Alumni Associations of Malaysia (UCSAAM) 马来西亚华校校友会联合会总会
- United Chinese School Committees’ Association of Malaysia (Dong Zong) 马来西亚华校董事联合会总会(董总)
- United Chinese School Teachers Association of Malaysia (UCSTAM) 马来西亚华校教师会总会(教总)
- Women Development Organization of Malaysia Petaling Jaya (WDO-M) 马来西亚妇女发展组织,八打灵区
- Women’s Centre for Change, Penang (WCC) 槟城妇女改革中心
இதற்க்கு மேலே தெளிவாக சொல்ல ஒன்றும் இல்லை.
HUDUD நான் ஆதரிக்கிறேன்
ரஜினி கட் அவுட்டுக்கு பால் ஊற்றினால் hudud சட்டபடி கை துண்டிக்கப்படும் !
தப்பு செய்தால் தான் தண்டிக்க படுவார்கள் ,கட் வுட்டுக்கு பால் ஊற்றினால் தண்டிக்க பட மாட்டார்கள் , தைபூசம் அன்று மருகன் சிலைக்கு பால் லோரி லாரியாக ஊற்றினால் தான் கை துண்டிக்க படும் .
சும்மா இருக்கிறவர்களை உசிப்பி விடுவது இந்த தமிழனுக்கு ஒரு வேலையாக போச்சி ,,அடுத்தவனை குறை சொல்லியே நாசமா போங்கடா …….பயல்கள ,,,,,,,
முருகனுக்கு லாரி-லாரியாக பால் ஊற்றி அபிஷேகம் செய்ய சொன்னது முருகன் அல்லவே. ரசீது கொடுத்து பணம் வாங்கும் ஆலய நிருவாகம் செய்யும் வியாபாரம். முடிந்தால் அவர்களின் கைகளை வெட்டுங்கள். பக்த பெருமக்களுக்கு, முருகனை ஒரு நாளைக்கு அபிஷேகம் செய்ய ஒரு சொம்பு சுத்த பசும்பால் போதுமானது. பக்திப் பெருக்கெடுத்து ஓடும் பக்தர்களாக இருக்கும் நம்மவர்கள், கலப்படம் செய்யப் பட்ட விலை மலிவான ‘பாலாக’ கருதப் படும் ‘Magnolia’ வகை கலவைத் தண்ணீரைக் கொண்டு அபிஷேகம் செய்வதை அந்த முருகனே விருபவில்லை என்பதை இவர்களுக்கு செம்பருத்தி வழியாகத்தான் சொல்லி புரிய வைக்க வேண்டியுள்ளது. புரிந்துக் கொண்டவர்கள் முதலில் நம் பெண்மணிகளிடம் கொஞ்சம் எடுத்துச் சொல்லுகப்பா. கை, கால் எல்லாம் வெட்ட வேண்டும் என்று எம் கடவுள் எங்களுக்குச் சொல்லிச் தரவில்லை. தவறு செய்தவர்களை அன்பால் தெளிய வைக்கலாம். இப்படிதான் அறிவார்ந்த இந்தியச் சமயங்களைச் சார்ந்த சில வல்லுனர்கள் சிறைக் கைதிகளாக இருக்கும் நம் இந்தியர்களுக்கு பாடம் புகட்ட, ஏன் இவற்றை எல்லாம் எங்களுக்கு முன்னமே சொல்லிக் கொடுக்க வில்லை என்று கேட்ட தூக்குத் தண்டனை கைதிகளும் இருக்கின்றார்கள். முதலில் தனி மனிதர் மாற்றம் தேவை பின்னர் நம்மைச் சார்ந்த சமூகம் தானாகவே மாறும். தைபூசத்திற்கு லாரி-லாரியாக “பால்” எனப்படும் கலைவைத் தண்ணீரை வெறுமனே முருகன் பெயரைச் சொல்லி அபிஷேகம் என்ற போர்வையில் வீணடிக்க வேண்டாம் என்று மோகன் ஷான்(?) கேட்டுக் கொள்கின்றார்.
என்ன நடக்குது இங்கே ???
என்ன நடுக்குதா ?? தமிழனுக்கு தமிழன் HUDUD சட்டத்தை மாற்றி மாற்றி பயன் படுத்துகிறார்கள் .
ஆலய விவகாரத்தில் தேவையின்றி தலையிடுதலை நிருத்தவிடுங்கள்.ஆலயத்தின் நிர்வாகம் அவர்களிடமே விட்டுவிடுங்கள்,ஆலயத்திற்கு சென்றோமா ஆதியை வணங்கினோமா மங்கள ஸ்லோகத்தை வாசித்தோமா/தேவார திருவாசகத்தை பாடினோமா வீட்டுக்குப் போனோமா குடும்பத்தோடு இனிப்பு பரிமாறி மகிழ்ந்தோமா என்று யோசிக்கவும்.என்று முருகன் பாலாபிஷேகம் வேணாம் சொன்னார்.நிம்மதியான வாழ்வே அதாவது சௌபாக்கியம் பெருவதே ப்ரார்தனை,வாழ்க நாராயண நாமம்.