பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி)க்கு ஆதரவாக பேரணி எதையும் நடத்தவில்லை என்கிறது பெர்காசா. “ரெட் பீன் ஆர்மி”தான் அப்படியொரு புரளியைக் கிளப்பி விட்டிருக்கிறது என்றும் அது கூறியது.
“மே 22-இல், டாட்டாரான் மெர்டேகாவில் அப்பேரணியை ஏற்பாடு செய்யும் என்று கூறப்படுவதை பெர்காசா மறுக்கிறது.
“இது, அமெரிக்கர்களிடமிருந்து மில்லியன் கணக்கில் பணம் பெறும் ரெட் பீன் ஆர்மியின் அசிங்கமான வேலையாகத்தான் இருக்கும் என்பது உறுதி”, என பெர்காசா தலைமைச் செயலாளர் சைட் ஹசன் சைட் அலி ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ரெட் பீன் ஆர்மி என்பது இணையத்தளத்தில் செயல்படும் ஒரு குழுவுக்கு உத்துசான் மலேசியா கொடுத்துள்ள அடைமொழி. அது டிஏபி-க்காக வேலைசெய்வதாக அது கூறிவருகிறது.
தப்பித்தீர்கள்! உங்களால் எந்தப் பேரணியையும் நடத்த முடியாது. ஓசிச் சாப்பாட்டில் உயிர் வாழும் உங்களுக்கு ஜி.எஸ்.டி. பற்றிக் கவலைப்படுவதற்கு என்ன தலைஎழுத்தா!
பேரணிக்கு 50 பேர்கள் கூட தேற மாட்டார்கள் என்று பயமா?.