ஹுடுட் விவகாரத்தால் பக்காத்தான் ரக்யாட்டில் ஏற்பட்டுள்ள விரிசல் விரிவடைந்து வருவதைச் சுட்டிக்காட்டி அதைத் தொடர்ந்து வலியுறுத்துவதால் பேராபாயம் விளையலாம் என மேலும் ஒரு டிஏபி தலைவர் எச்சரித்துள்ளார்.
அம்னோ விரித்துவைத்துள்ள வலையில் சிக்கிக் கொள்ள வேண்டாமென்று பாஸுக்கு எச்சரிக்கை விடுத்த சீபூத்தே எம்பி, தெரேசா கொக், ஹுடுட் விவகாரம் தங்கள் அரசியல் எதிரியிடமுள்ள ஒரு சக்திவாய்ந்த ஆயுதம் என்றார்.
அவ்விவகாரத்தால் மாற்றரசுக் கூட்டணி உடைந்துபோகும் சாத்தியம் உள்ளதைச் சுட்டிய அவர், அவ்வாறு நிகழ்ந்தால் அது சிறப்பான மலேசியாவை அமைக்கும் மக்களின் போராட்டத்துக்கு ஒரு பின்னடைவாக அமையும் என்றார்.
ஹுடுத் தே.மு. – யை அழிபதற்க்கான ஆயுதமாகவும் பயன்படும்!. “Double edged sword”.
ஹுடுட் சட்டத்தை நிறை வேட்றினால் பல பெரிய தலைகளின் கை ,கால் ,மர்ம உறுப்புக்கள் ,வெட்ட படும் அந்த பயத்தில் பல பெரிய தலைகள் ஆட்டம் கண்டு விட்டன .
நண்பர்களே! புரிந்துதான் பேசுகிறீர்களா? ஹுடுட் அமுலுக்கு வந்தால், பல ‘பெரிய தலைகள்’ உருளும் என்கிறீர்களே, எப்படி? பாஸ் கொண்டு வரும் பிரேரணையை, நாடாளுமன்றத்தில் ஆதரிக்கப் போவதில் முதன்மை வகிப்பதே அம்னோ தான். அப்படியிருக்க, ‘பெரிய தலைகளுக்கு ‘ ஆபத்து என எதை வைத்து சொல்கிறீர்கள்?
பாஸ் கட்சி கொண்டு வரும் ஹுடுட் சட்டம், அம்னோவின் ஆதரவின்றி சட்டமாகாது. நாடாளுமன்றத்தில் ஹுடுட் சட்டமாக்க ப்பட்டால், பாஸ் கட்சியும். அம்னோவும் இணைந்துவிட இது வழி வகுக்கும். அதன் பிறகு, எக்காலத்திலும் பக்காத்தான், மத்தியில் ஆட்சிக்கு வர முடியாது. பி.கே.ஆர். கட்சியும் நாளடைவில் காணாமல் போய் விடும். ஏனென்றால், இக்கட்சியில் உள்ளோர் பெரும்பாலும் ‘அங்கிருந்து’ வந்தவர்களே. பாரிசானில் ம.சீ.ச. வுக்கு செல்வாக்கு குறைவதால், அதிலுள்ளோர் பெரும்பாலோர் டி.எ.பி.யில் சேர்ந்து விடுவர். நாளடைவில் அதுவும் சீனர் கட்சியாகிவிடும். இந்தியர்கள் பூர்வகுடி list ல் சேர வேண்டிவரும்.நம் நாட்டிக்கு ‘சனி’ ஆரம்பமாகிவிட்டது.
நடவாத ஒன்றுக்கு குழம்பவேண்டாம்…. அம்னோ ஒரு பொழுதும் நேரடியாக ஆதரிக்காது…… அரசியல் விளையாட்டில் பாசுக்கு எனது வாழ்த்துகள்…..