ஹூடுட் சட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் தனிப்பட்ட உறுப்பினர் மசோதாவை ஒன்றை தாக்கல் செய்யும் பாஸ்சின் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சுமார் 30 மசீசவின் இளைஞர் பிரிவு, சீன அமைப்புகள் மற்றும் அரசு சார்பற்ற அமைப்புகள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் பாஸ் கட்சியின் தலைமையகத்தின் முன் கூடி ஐந்து நிமிடங்களுக்கு தங்களுடைய எதிர்ப்பைத் தெரிவித்தனர்.
மசீச கூட்டரசுப் பிரதேச இளைஞர் பிரிவின் தலைவர் டான் கோக் எங்கின் தலைமையில் காலை மணி 10.00 க்கு அங்கு கூடினர். அவர்கள் பதாகைகளையும் அட்டைகளையும் ஏந்தி நின்றனர். அவற்றில் “பாஸ்சின் ஹூடுட் வேண்டாம் என்று கூறுங்கள்” என்ற வாசகம் எழுதப்பட்டிருந்தது.
டான் ஒரு மகஜரை பாஸ் பணியாளர் ஃபதி ஓஸ்மானிடம் கொடுத்தார். அதில் அந்த இஸ்லாமியக் கட்சி மலேசிய அரசமைப்புச் சட்டத்தை மதிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டிருந்தது.
“மலேசியா ஓர் இஸ்லாமிய நாடு என்று நாங்கள் எண்ணவில்லை”, என்று ஆர்ப்பாட்டம் முடிவுற்ற பின்னர் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் டான் கூறினார்.
ஆனால், கிளந்தானில் ஹூடுட் சட்டத்தை அமல்படுத்துவதற்கு அம்னோ உதவ முன்வந்திருப்பது பற்றி வினவப்பட்ட போது அவர் மிகக் கவனமாக இருந்தார்.
அம்னோவின் நிலைப்பாட்டை தாம் மதிப்பதாகக் கூறிய அவர், அதற்கு மேல் அவ்விவகாரம் குறித்து கருத்து கூறவில்லை.
யானைக்கு கொழுப்பு ஏறினாள் தன் தலையில் மண்ணை தானே வாரி போட்டுக்கொள்ளும் என்பார்கள் ,குற்றம் செய்யும்
அனைவரின் விரல்களை துண்டித்து விட்டால் அப்புறம் உடல் ஊனமாகி எல்லோரும் பிச்சை எடுக்க வேண்டுமா நைனா
என்ன வெளிவேஷமடா இது?. அந்த ஹுடுத் சட்டத்திற்கு ஆதரவு அளிப்போம் என்று கூறும் அம்னோவின் நிலைப்பாட்டை தாம் மதிப்பதாகக் கூறிய டான் கோக் எங், தனிநபர் மசோதாவை பாஸ் கொண்டுவரவிருப்பத்தை எதிர்ப்போம் என்பது அறிவுடையவர் செய்யும் செயல் அல்ல. இது அசிங்கமான, அப்பட்டமான கூவ ஆற்று அரசியல். ம.சி.ச. இவ்வளவு கீழ்த்தரமாக நடந்துக் கொள்வதை சீனர்களே வெறுத்து ஒதுக்குவார்கள்.
ஏன் ஹுடுட் சட்டத்தை கண்டு பயப்படுகிறார்கள் மடியில் கணம் இருந்தால் வழியில் பயம் ???