அதிகாரமீறலில் ஈடுபடாதீர்: ஆள்வோருக்கு மகாதிர் அறிவுரை

mahடாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  22ஆண்டுக்கால  ஆட்சியின்போது  தவறுகள்  செய்ததாக,  அதிகாரமீறல்களில்  ஈடுபட்டதாக  எத்தனையோ  குற்றச்சாட்டுகள்  உண்டு. ஆனால்,  அத்தனையையும்  அவர்  மறுத்தே  வந்துள்ளார்.

இப்போது,  பதவி  விலகி  பதினோரு  ஆண்டுகளுக்குப்  பிறகு,  அந்த  முன்னாள்  பிரதமர்,  ஆட்சியில்  இருப்போர் பொறுப்புடன்  நடந்துகொள்ள  வேண்டும்  என்று  அறிவுறுத்தியுள்ளார்.

பேராக்  பட்டத்திளவரசர்  ராஜா  நஸ்ரின்  ஷா  அண்மையில்  ஆற்றிய  உரை  பற்றிக்   கருத்துரைத்தபோது  டாக்டர்  மகாதிர்   இவ்வாறு  கூறினார்.

“சரியான  நேரத்தில்  ராஜா  நஸ்ரின்,  குடிமக்களுக்கும்  அரசியல்  தலைவர்களுக்கும்  ஆட்சியாளர்களுக்கும்  நம் நாடு  நாடாளுமன்ற  ஜனநாயகத்தையும்  அரசமைப்புப்படியான  முடியாட்சியையும்  கொண்ட  நாடு  என்பதை  நினைவுபடுத்தியுள்ளார்.

“எவரும்  எக்காரணத்துக்காகவும்  தங்களிடம்தான்  ஏக  அதிகாரம்  உள்ளதாகவும் அதனால்  நாடாளுமன்ற  ஜனநாயகத்தையும்  அரசமைப்புப்படியான  முடியாட்சியையும்  மதிக்கத்  தேவையில்லை  என்றும்  எண்ணிவிடக்  கூடாது”,  என  மகாதிர்  கூறினார்.