“ஒண்டர்புல் மலேசியா” வீடியோ தயாரித்ததற்காக தெரெசா கோக் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு

 

Teresa - sedition charge“ஒண்டர்புல் மலேசியா” என்ற சீனப் புத்தாண்டு நையாண்டி வீடியோவை தயாரித்ததற்காக டிஎபி செபூத்தே நாடாளுமன்ற உறுப்பினர் தெரெசா கோக் மீது தேசநிந்தனை குற்றச்சாட்டு சுமத்தப்படவிருக்கிறது.

கோலாலம்பூர் செசன்ஸ் நீதிமன்றத்தில் அவர் குற்றம் சாட்டப்படுவார் என்பதை அவரது Teresa - sedition charge2வழக்குரைஞர் சங்கரா நாயர் உறுதிப்படுத்தினார்.

நாளை காலையில் தெரெசாவை நீதிமன்றத்திற்கு கொண்டு வருமாறு தமக்கு தெரிவிக்கப்பட்டதாகவும், அவருடன் தொடர்பு கொண்டதாகவும் சங்கரா மலேசியாகினியிடம் கூறினார்.

தெரெசா தற்போது சபாவிலிருந்து கோலாலம்பூருக்கு பயணித்துக் கொண்டிருப்பதால் அவருடை கருத்தைத் தெரிந்து கொள்ள இயலவில்லை.

TAGS: