அன்வார் சிறை வைக்கப்படுவது நல்லது என்கிறார் சமூக ஆர்வலர்

raisபிரபல  சமூக  ஆர்வலரான  ஹிஷாமுடின்  ரயிஸ்,  எதிரணித்  தலைவர்  அன்வார்  இப்ராகிம்  குதப்புணர்ச்சி  வழக்கு  தொடர்பில்  சிறை  சென்றால்  அதற்காக  வருத்தப்பட  மாட்டார்.

நேற்றிரவு  ஒரு  கருத்தரங்கில்  பேசிய  அவர்,“அன்வார்  சிறை  செல்வது  நல்லதுதான்.  அதற்காக  மகிழ்வேன்”, என்றார். அது,  மக்கள்  மீண்டும்  தெரு  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட  தூண்டுதலாக  இருக்கும்.

1998-இல்  அன்வார்  முதன்முதலாக  சிறையில்  தள்ளப்பட்டது  ரிபோர்மாசி  இயக்கத்தைத் தூண்டிவிட்டது.  அதன்  விளைவாக  1999 பொதுத்  தேர்தலில்  பிஎன்னுக்கு  பெரிய  பின்னடைவு  ஏற்பட்டது. கிளந்தான், திரெங்கானு  மாநிலங்களை  அது  இழந்தது.