எம்எச்370: தேடும்பணிக்கான செலவு கூடிக்கொண்டே போகிறது

370எம்எச்370-இன்  இரண்டு  மாதத்  தேடும்பணிக்கு, ஏர் பிரான்சின் ஏஎப் 447 விமானத்தைத்  தேடிக் கண்டுபிடிக்க  இரண்டு  ஆண்டுகளில்  செலவிட்டதைவிட  கூடுதலாக  செலவாகியுள்ளது.

ஆஸ்திரேலியா  மட்டுமே  நாளொன்றுக்கு  ஆ$1 மில்லியன் (ரிம3.02 மில்லியன்)  செலவிட்டிருக்கலாம்  என  தற்காப்பு  வல்லுனர்கள்  கூறியுள்ளனர்.  அதன்படி  பார்த்தால்  அது  மார்ச்  17  தொடங்கி  ஏப்ரல் 28வரை  $43மில்லியன்(ரிம130 மில்லியன்) செலவிட்டிருக்கலாம்.

கடந்த  வாரம்  ஆஸ்திரேலிய  பிரதமர்  டோனி  அப்பட்டிடம்  செலவு  பற்றி  வினவியதற்கு  அவர்  பதில்  சொல்ல விரும்பவில்லை.

காணாமல்போன  எம்எச் 370-ஐ  தேடும்பணி இப்போது  மூன்றாவது  மாதத்தில்  அடியெடுத்து  வைக்கும்  வேளையில்  அடுத்து  என்ன  செய்யலாம்  என்பதை மலேசிய,  ஆஸ்திரேலிய,  சீன  அமைச்சர்கள்  இவ்வாரம்  கேன்பெர்ராவில் கூடி  முடிவு  செய்வார்கள்.