சஞ்சீவன்: ஓராண்டு ஆகிறது, ஐஓ-கூட யாரென்று தெரியவில்லை

sanjeevகுற்றத்  தடுப்புக்  கண்காணிப்பு  அமைப்பான  மைவாட்ச்-இன் தலைவர்  ஆர்.ஸ்ரீ சஞ்சீவன், தாம்  சுடப்பட்ட  சம்பவம்மீது  போலீஸ்  செயல்படாதிருப்பதாகக்  குறைகூறினார். சுடப்பட்டு   ஒராண்டுகிறது. இந்த வழக்கின்  விசாரணை  அதிகாரி(ஐஓ)யின்  பெயர்கூட  தெரியவில்லை  என்றாரவர்.

கடந்த  ஆண்டு  ஜூலை  27-இல், நெகிரி  செம்பிலானில் மோட்டார்  சைக்களில்  வந்த  இருவரால்  சுடப்பட்ட  சஞ்சீவன்,  அதன்  தொடர்பில்  இதுவரை  எவரும்  கைது  செய்யப்படாதது  ஏன்  என்று  வினவினார்.

இன்று  பெட்டாலிங்  ஜெயாவில்  செய்தியாளர்  கூட்டமொன்றில்  பேசிய  சஞ்சீவன்,  இரண்டு  நாள்களுக்குமுன்  பஹாவில்  கம்போங்  தாமான்  ஜெயாவில்  உள்ள  தம்  குடும்ப  வீட்டின்  அஞ்சல்  பெட்டியில்  இன்னும்  பயன்படுத்தப்படாத  மூன்று  துப்பாக்கி  ரவைகள்  கிடந்ததாகக்  கூறினார்.

“இதுவே  ஓர்  அமைச்சர்  சம்பந்தப்பட்ட  விவகாரமாக  இருந்தால்  விரைவாக  விசாரிக்கப்பட்டிருக்கும்.

“ஆனால்,  இச்சம்பவத்தில்  என்  உயிரே  போகும்  அபாயம்  இருந்தது  என்றாலும்  எதுவும்  செய்யப்படவில்லை”, என்றாரவர்.