“இஸ்மா” என்ற பெயரை முதல்முதலாகக் கேள்விப்பட்டபோது அது ஒரு பாலியல் நோய் என்றுதான் நினைத்தார் எஸ். வேள்பாரி.
“ஆனால், அது அதைவிட மோசமானது என்பதை இப்போது தெரிந்துகொண்டேன்”, என்றாரவர்.
ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா என்பதன் சுருக்கமான இஸ்மாவின் தலைவர் அப்துல்லா ஜைக் அப்துல்லா, அண்மையில் சீனர்களைப் கேவலமாக பேசியது பற்றிக் கருத்துரைத்தபோது மஇகா வியூக இயக்குனர் வேள்பாரி இவ்வாறு கூறினார்.
சீன மலேசியர்களின் முன்னோர், “மலாய்க்காரர்களை ஒடுக்கி வைப்பதில் பிரிட்டிஷாருக்கு உடந்தையாக இருந்தனர்” என்று அப்துல்லா கூறினார்.
வரலாற்றில் நிகழ்ந்த இத்தவற்றைச் சரிசெய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
“அவர் மலாய்க்காரர்கள் ‘வரலாற்றில் நிகழ்ந்த தவற்றைச் சரிசெய்ய வேண்டும்’ என்று வலியுறுத்தியதன் பொருள் என்ன? இரத்தம் சிந்த வேண்டும் என்கிறாரா? இஸ்மா ஒரு பயங்கரவாத அமைப்பா, போலீஸ் அவர்களைக் கவனிக்கப்போவதில்லையா?”, என்று வேள்பாரி வினவினார்.
இவருடைய தகப்பனார், இப்படித்தான் வீரவசனம் பேசி அன்று ம. இ.கா. வை பிடித்தார் !!! அதே டக்கால்தி டெக்னிக் வித்தையை இவரும் பாவிக்கிரார் !!! யாவரும் ஜாக்கிரதை, ஒரு முறை ஏமாந்ததது போதும்.
சில நல்ல விசயங்களை யார் சொன்னால் என்ன கரு முக்கியம்.
உன்மைதான் இளைஞனே ! என்ன செய்வது, ஒரு முறை பாம்பு கொட்டிவிட்டால், கயிறைபார்த்து பயப்படுவது நியாயம் தானே!!!
வேல் பாரி சொன்ன கருத்தை நான் ஏற்று கொள்கின்றேன் .யார் சொலுகிறார் என்று முக்கியம் இல்லை என்ன சொல்லுகின்றார் என்பதுதான் முக்கியம்
இவன் எல்லாம் கருத்து சொன்ன நாடு முன்னேறுமா
டேய் தம்பி முதலில் சுஜாதா கொலை எப்படி நடந்தது சொல்லும், உன் மணியுடன் நீ சேர்ந்து வாழ்கிறாயா என்று சொல்லும்… பயலே நீ எல்லாம் பேச நாங்க கேட்க்குநோமா ?
வேல்பாரியா அல்லது வேள்பாரியா…எது சரியான வார்த்தை…ஒன்று
முருகக் கடவுளுக்கு உரியது…இன்னொன்று…..
மிஸ்டர் வேள்பாரி! ம.இ.கா. வில் இருந்து கொண்டு சத்தம் போடுவதால், உங்களை ஓர் சர்கஸ் வித்தைக்காரர் போல் பர்ர்க்க வேண்டியுள்ளது. ம.இ.கா.வை மூட்டைகட்டி வைத்து விட்டு வெளியே வாருங்கள். மரியாதை கிடைக்கும்.
இஸ்மாவைப் பற்றி நீங்க இப்பத்தான் தெரிஞ்சுகிட்டிங்கன்னா, இது நாள் வரை தூங்கிக் கொண்டிருந்தீர் என்றுதானே அர்த்தம்?. தொண்டனே இப்பதான் விழிதிருக்கின்றார். ம.இ.க. தலைவர்கள் எப்ப முழிக்கப் போகின்றார்கள் என்று தெரியவில்லையே!.
சொல்லப்படும் கருத்து என்ன அது முக்கியமா என்பதை பார்ப்பதை விட்டு ஒருவர்களின் பின்புலத்தை பார்க்காதிர்கள். எழுதுபவர்கள் எல்லாம் யோகியமானவர்களா? எந்த தப்பையும் செய்யாதவர்களா? சற்றே யோசியுங்கள்!!
naachell ! naachell !! naachell!!! யோக்கியமானவர்களா , அயோக்கியமானவர்களா, என்று பார்ப்பதற்க்கு இது ஒன்றும் காதலர்களின் சண்டையோ, அல்லது நண்பர்களின் சமாச்சாறமோ அல்ல. ஒரு பின்தங்கிய சமூகத்தின் ஓலம். சாத்தான் கையிலே பைபல் என்ற கதையாகிவிடக்கூடாது !