சிலாங்கூரில் நச்சுத்தன்மை வாய்ந்த நீர் பயன்படுத்தப்படுகிறதாம்

water1ஈயக்குட்டைகளில்  உள்ள  நீரைக்  கொண்டு  தண்ணீர் தட்டுப்பாட்டுக்குத்  தீர்வுகாணலாம்  என  சிலாங்கூர்  அரசு  திட்டமிட்டுக்  கொண்டிருக்கும்  வேளையில்  ஈயக்குட்டை  நீர்  “நச்சுத்தன்மை” வாயந்தது  என  நியு  ஸ்ரேய்ட்ஸ்  டைம்ஸ்  செய்தி  கூறுகிறது.

பெஸ்தாரி  ஜெயாவில் பயன்படுத்தாமல்  உள்ள  ஈயக்குட்டைகளின்  நீரைச்  சோதனை  செய்து  பார்த்ததில்  அதில்  காரீயம், இரும்பு, மங்கனீஸ்,  நிக்கல்  ஆகிய  கனிமங்கள்  அளவுக்கு  அதிகமாக  இருப்பது  தெரிய  வந்ததாக  அச்செய்தித்தாள்.  ஒரு  சிறப்பறிக்கையில்  கூறியது.