‘நிக் நஸ்மிமீது மீண்டும் குற்றம்சாட்டுவது முறையல்ல’

leong12  நாள்களுக்குமுன்  எந்தக் குற்றச்சாட்டிலிருந்து  விடுவிக்கப்பட்டாரோ  அதே  குற்றச்சாட்டை  மீண்டும்  ஸ்ரீசித்தியா  சட்டமன்ற  உறுப்பினர்  நிக்  நஸ்மி  நிக்  அஹ்மட்மீது சுமத்துவது  முறையல்ல  என்பதுடன்  அது  பொதுப்பணத்தை  விரயம்  செய்வதுமாகும்  என  வழக்குரைஞர் மன்றத்  தலைவர்  கிறிஸ்தபர்  லியோங்  கூறினார்.

கடந்த  ஆண்டு  பொதுத்  தேர்தலுக்குப்  பின்னர் நடத்தப்பட்ட  ‘கருப்பு 505’  பேரணி   பற்றி  10-நாள்களுக்குமுன்  போலீசுக்குத் தெரிவிக்கவில்லை  என  அமைதிப்பேரணிச்  சட்டம்  பகுதி 9(5)-இன்கீழ்  நிக்  நஸ்மிமீது  குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

ஏப்ரல்  25-இல்,  முறையீட்டு  நீதிமன்றம்  அவரை  விடுதலை  செய்தது.  பிறகு மீண்டும்  அவர்மீது  அதே  குற்றச்சாட்டு  சுமத்தப்பட்டபோது  நேற்று  செஷன்ஸ்  நீதிமன்றமும் அவரை விடுதலை  செய்தது.

“நீதிமன்றத்தில்  விடுவிக்கப்பட்ட  ஒருவர்மீது மீண்டும்  அதே  குற்றச்சாட்டைச்  சுமத்துவது  முறையல்ல. இது  பொதுப்பணத்தை  விரயம்  செய்யும்  வேலை”  என்று  லியோங்  மலேசியாகினியிடம்  கூறினார்.