முஸ்லிமின் கையை வெட்டுவதும் முஸ்லிம்-அல்லாதாரைச் சிறையில் இடுவதும்தான் நியாயமாகும்

huduஒரு  முஸ்லிம்,  முஸ்லிம்-அல்லாத ஒருவருடன்  சேர்ந்து  குற்றம்  புரிந்திருந்தால்,  ஹுடுட்  சட்டத்தின்படி  அவரின்  கையை  வெட்ட  வேண்டும்;  அவருக்கு உடந்தையாக  இருந்த  முஸ்லிம்-அல்லாதவர்  சிவில்  சட்டப்படி  தண்டிக்கப்பட  வேண்டும். அதுதான்  நியாயம்  என்கிறார்  கிளந்தான்  துணை  மந்திரி  புசார்  நிக்  அமார்  அப்துல்லா.

சினார்  ஹரியான்  ஏற்பாடு  செய்திருந்த  ஹுடுட்மீதான  கருத்தரங்கில்  பேசிய  நிக்  அமார்,  முஸ்லிம்  என்பதால்  அந்நபர்  இஸ்லாத்தையும்  அதன்  சட்டத்தையும்  ஏற்பதே  முறையாகும்  என்றார்.

சேர்ந்தே  செய்த  குற்றத்துக்கு  ஒரு  முஸ்லிமுக்கு  முஸ்லிம்-அல்லாதவரைவிட  கடுமையான  தண்டனை  விதிப்பது  சரியா  என்று  கேட்கப்பட்டதற்கு  அவர்  இவ்வாறு  பதிலளித்தார்.