மகாதிர்: பகிர்ந்துகொள்வது டிஏபி-க்குப் பிடிக்காது

mahaசீனர்கள்  ஆதிக்கம்  செலுத்தும்  டிஏபி,  இனங்களுக்கிடையில்  பகிர்தல்  என்பதில்  நம்பிக்கை  இல்லாத  கட்சி  என  முன்னாள்  பிரதமர்  டாக்டர்  மகாதிர்  முகம்மட்  அவரது  வலைப்பதிவில் சாடியுள்ளார்.

“தகுதிமுறையைத்தான்  அக்கட்சி  நம்புகிறது”,  என்றாரவர்.  தகுதிமுறையில்,  தகுதியுள்ளவர்கள்  இருப்பதையெல்லாம்  அள்ளிக்கொள்வார்கள்.

பொருளாதார  ஆதிக்கத்தை  விட்டுக்கொடுக்காமல்,  அரசியல்  அதிகாரத்தைப்  பெறுவதே  டிஏபி-இன்  இலக்காகும்  என்று  மகாதிர்  கூறினார்.

“தகுதிமுறையின்  வழியாகவும்  மலாய்க்காரர்கள்  பிளவுபடுவதாலும்  அதைச்  சாதிக்க  முடியும்  என  அது  நம்புகிறது”, என்றாரவர்.