தமிழ்ப்பள்ளிகளின் வாரியங்களை ஒருங்கிணைக்கும் தேசிய அமைப்பாக தமிழ் அறவாரியம் திகழும்

Tamil Foundationஇந்நாட்டிலுள்ள 523 தமிழ் தொடக்கப்பள்ளிகளில் 300 க்கு மேற்பட்ட தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் இன்னும் அமைக்கப்படவில்லை. இதனால் அப்பள்ளிகளை மேம்படுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

இந்நாட்டு தமிழர்களின் அடையாளமாகக் கருத்தப்படும் தமிழ்ப்பள்ளிகளின் ஒட்டுமொத்த மேம்பாட்டிற்காக பல செயல்முறைத் திட்டங்களைத் தீட்டி அவற்றை வெற்றிகரமாக அமல்படுத்தி தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தமிழ் அறவாரியம் இதுவரையில் ஆற்றிவந்துள்ள சேவைகளைக் கண்டறிந்த அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியங்கள் அமைப்பதில்  தமிழ் அறவாரியத்துடன் இணைந்து செயல்படும் என்று இன்று காலையில் தமிழ் அறவாறியத்தில் நடைபெற்ற ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தமிழ் அறவாரியத்தின் ஆலோசகர் கா. ஆறுமுகம் கூறினார்.

அரசின் அங்கீகாரம்

“அரசாங்கம் தமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் சார்புடைய பணிகளில் தமிழ் அறவாரியத்திற்கு ஆதரவாகச் செயல்படும் என்று தெரிவித்தது”, என்று ஆறுமுகம் தெரிவித்தார்.

“இது தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்கு தமிழ் அறவாரியம் கடந்த பல ஆண்டுகளாக ஆற்றி வந்த சேவைக்கு அரசாங்கத்திடமிருந்து கிடைத்த அங்கீகாரமாகும்”, என்று அவர் மேலும் கூறினார்.

pathi_tamil_foundationதமிழ்ப்பள்ளிகளில் பள்ளி வாரியம் அமைக்கப்பட வேண்டியது மிக அவசியமாகும். பள்ளி வாரியங்கள் அமைப்பது தமிழ் அறவாரியம் மேற்கொண்டுள்ள பல்வேறு நடவடிக்கைகளில் ஒன்றாகும் என்ற தமிழ் அறவாரியத்தின் தலைவர் சி. பசுபதி .

“தமிழ்ப்பள்ளிகளை மேம்படுத்துவதும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கல்வி தரத்தை உயர்த்துவதும் மிக முக்கியமாகும். இந்த முக்கியமான பணியை சிறப்பாகச் செய்து முடிப்பதற்கு ஒவ்வொரு தமிழ்ப்பள்ளியிலும் பள்ளி வாரியம் இருக்க வேண்டும்”, என்றார். மேலும் “இதனைச் செய்து முடிப்பதற்கு தமிழ் அறவாரியம் கடுமையாக உழைத்து வருகிறது. இக்கடப்பாட்டை நிறைவேற்றுவதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது”, என்பதை பசுபதி வலியுறுத்தினார்.

சீனர்களைப் போல் செயல்பட வேண்டும்

K. Arumugam Bersihதமிழ் அறவாரியத்தின் தலையாய ஈடுபாடு தமிழ்க் கல்வி மற்றும் தமிழ்ப்பள்ளிகள். அவற்றை வளப்படுத்தி, வலுப்படுத்த நாம் சீனர்களின் வழியைப் பின்பற்ற வேண்டும்.

“சீன கல்விமான்களின் அமைப்பான டோங் ஸோங்கைப் போல் தமிழ் அறவாரியமும் தமிழ்ப்பள்ளி வாரியங்களை அமைத்து தமிழ் கல்வியை மேம்படுத்த வேண்டும். இது நமது தலையாய ஈடுபாடு. டோங் ஸோங் வழியை தமிழ் அறவாரியம் பின்பற்றுகிறது.

“2008 ஆம் ஆண்டிலிருந்து, பல்வேறு எதிர்ப்பு ஆர்பாட்டங்களினால் விழுப்படைந்துள்ள நம் மக்கள் தமிழ் மொழி, தமிழ்ப்பள்ளி மற்றும் அவற்றின் எதிர்காலம் ஆகியவற்றை உரிமை கண்ணோட்டத்துடன் பார்க்கின்றனர், கேள்விகள் எழுப்புகின்றனர்:

தமிழ்ப்பள்ளி நமது உரிமையா? தமிழ்ப்பள்ளியை அரசாங்கமே நடத்தட்டும் என்று விட்டு விடுவோமா?, அல்லது தமிழ்ச் சமூகம் தமிழ்ப்பள்ளியை சமூகச் சொத்தாக்கிக் கொள்ளலாமா? போன்ற வினாக்களுக்கு விடை தேடுவதில்  அரசியல்-சமூக சிந்தனையுடன் தமிழ் அறவாரியம் செயல்படும் என்றார் ஆறுமுகம்.

இது மட்டுமல்ல. தமிழ் மொழி ஏற்றுக்கொள்ளப்பட்ட மொழி. தமிழ் மொழி இந்நாட்டு ஆட்சி மொழிகளில் ஒன்றாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற சிந்தனையும் துளிர் விட்டுக் கொண்டிருக்கிறது. இவை புதிய உணர்வுகள் என்றாரவர்.

“இவற்றுக்கு உயிரோட்டம் அளித்துவரும், தமிழ் அறவாரியம் டோங் ஸோங் போன்ற அமைப்புகளுடன் சேர்ந்து செயல்படும்”, என்று ஆறுமுகம் மேலும் கூறினார்.

இவற்றை சாதிப்பதற்கு அனைவரின் ஒத்துழைப்பும் தேவை என்பதை வலியுறுத்திய ஆறுமுகம், “ஊடகங்களின் ஆதரவு மிக அவசியம்”, என்றார்.

தமிழ் அறவாரியம் இதுவரையில் என்ன செய்திருக்கிறது என்ற கேள்விக்கு பதில் அளித்த சி.பசுபதி, “பலர் வாரியம் அமைக்கிறோம் என்று கூறுகிறார்கள். ஆனால், நாங்கள் நாடு தழுவிய அளவில் மாநில வாரியாக குழுக்களை அமைத்து தமிழ்ப்பள்ளிகளில் வாரியங்களை அமைத்துள்ளோம். அது இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.” என்றார்.

djz1மேலும், “தாய்மொழிக் கல்வியின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது. மாணவர்களின் வெற்றியில் பெற்றோர்களின் பங்கையும் ஈடுபாட்டையும் வலியுறுத்தும் “PASS” என்ற செயல்திட்டத்தை அறிமுகப்படுத்தி இதுவரையில் அதில் 5,000 க்கு மேற்பட்ட பெற்றோர்கள் பங்கேற்றுள்ளனர். அறிவியல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டன. ஆண்டுதோறும் உலகத் தாய்மொழி தினத்தை சீனர்களுடன் இணைந்து கடந்த எட்டு ஆண்டுகளாக ஓர் உரிமை சார்ந்த நிகழ்வாக கொண்டாடிவருகிறது.” என்று தமிழ் அறவாரியம் மேற்கொண்ட திட்டங்களில் சிலவற்றைப் பற்றி பசுபதி மேலும் விவரித்தார்.

தமிழ்ப்பள்ளி ஆசிரியர்களின் ஆதரவு

தமிழ் அறவாரியம் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் மேம்பாட்டிற்காக இதுவரை எடுத்துக்கொண்டுள்ள செயல்திட்டங்களுக்கு தமிழ்ப்பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்கள் முழு ஆதரவு அளித்துள்ளனர் என்று ஆறுமுகம் கூறினார்.

தமிழ்ப்பள்ளிகளின் மேம்பாட்டிற்காக தமிழ் அறவாரியம் இதுவரையில் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் அரசாங்கத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது என்று கூறிய ஆறுமுகம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்கள் தாய்மொழியில் போதிக்கப்பட வேண்டும் என்று தமிழ் அறவாரியம் நடத்திய போராட்டம் வெற்றி பெற்றதையும் நினைவுப்படுத்தினார்.

மேலும், நாட்டிலுள்ள தமிழ்ப்பள்ளிகளில் எந்த ஒரு பள்ளியும் பள்ளி வாரியம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவிக்காது என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

“இன்று, இந்நாட்டில் தமிழ்ப்பள்ளிகள்தான் தமிழ்ச் சமூகத்தின் அரசியல் பண்பாட்டு அடையாளம் என்பதை தனது கொள்கையாக்கியுள்ள தமிழ் அறவாரியம் அதனை தற்காக்கும்”, என்று ஆறுமுகம் திட்டவட்டமாகக் கூறினார்.