வந்தேறிகள் தலையிடக் கூடாது; ஆனால், வரி கட்ட வேண்டும்

ismaமலாய்க்காரர்- அல்லாதாரை  “pendatang (வந்தேறிகள்)”  என்று  குறிப்பிடும்  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா),  அவர்களின்  அரசியல்  ஈடுபாடு  மலாய்- முஸ்லிம்  விவகாரங்களில்  தலையிடும்  அளவுக்குச்  சென்று  விடக்கூடாது  என்று  வலியுறுத்துகிறது  ஆனால், வரிகளைப்  பொறுத்தவரை  எல்லோரையும்போலவே  கட்ட  வேண்டும்  என்கிறது.

முஸ்லிம்-அல்லாதாரின்  அரசியல்  ஈடுபாட்டுக்கு   வரம்பு  கட்டப்பட  வேண்டும்  என்று  கூறும்போது  அவர்கள்  கட்டும்  வரியின்  அளவும்  குறைக்கப்படுமா  என்று  கேட்டதற்கு  இஸ்மா தலைவர்  அப்துல்லா  ஷேய்க்  அப்துல்  ரஹ்மான்  இவ்வாறு  கூறினார்.

முஸ்லிம்-அல்லாதாரின்  அரசியல்  ஈடுபாடு,  மலாய்  இனம், இஸ்லாம்  ஆகிய  விவகாரங்களில்  தலையிடும்  அளவுக்குச்  செல்லுமானால்  அது  மலாய்க்காரர்கள்  அவர்களின்  எதிர்காலத்தைச் சுயமாக  நிர்ணயித்துக்கொள்ள  தடையாக  அமையும்.  அதை  அனுமதிக்க  வியலாது  என்றாரவர்.

வரியைப்  பொறுத்தவரை  குடிமக்கள்  என்ற  முறையில்  பெறும்  வருமானத்துக்கு  வரி  செலுத்தத்தான்  வேண்டும்  என்றார்.