மலாய்க்காரர்கள், சொந்த இனத்தார் என்பதால் ஊழலையும் அதிகார அத்துமீறலையும் கண்டும் காணாதிருப்பது முறையா என துணிச்சலுக்குப் பெயர்பெற்ற டிஏபி தலைவர் ஒருவர் கேட்டிருக்கிறார்.
அரிப் சப்ரி தம் வலைப்பதிவில், “இனம் என்பதற்காக அதிகாரமீறல்கள், அடக்குமுறை, திறமையின்மை, தேசிய வளத்தைச் அள்ளியிறைத்தல், பெரும்பான்மை மக்களை வறுமையில் உழல வைத்தல் ஆகியவற்றை மறந்துவிடலாகுமா.
“கொடுமைப்படுத்தி ஒடுக்கி வைப்பவர்களும் மலாய்க்காரர்கள், ஒடுக்கப்படுபவர்களும் மலாய்க்காரர்கள். இந்த நிலைமையில், நீங்கள் எந்தப் பக்கம்?”, என்றவர் வினவி இருந்தார்.
அம்னோ ஆதரவாளர்கள் அக்கட்சிக்கும் நாட்டைக் கொள்ளையிடும் அதன் திட்டங்களுக்கும் ஆதரவாக இருக்கலாம் ஆனால், தம்மைப் போன்ற மலாய்க்காரர்கள் அப்படி இருக்க மாட்டார்கள் என்றாரவர்.
“எங்கள் நோக்கம் தெளிவானது. சட்டப்பூர்வமான வழிகளில் அம்னோ தலைமையிலான அரசாங்கத்தைக் கவிழ்ப்பதே எங்களின் நோக்கம்”, என அந்த ராவுப் எம்பி கூறினார்.
நெற்றிக்கண் திறப்பினும்..குற்றம் குற்றம்தான்…விவேகமற்ற வேகம்…
கட்சியின் பலத்தில் ஆளும் எந்தவொரு அரசாங்கமும் தான்….என்கிற
இருக்கத்தான் செய்யும்….
சந்தோசம்.
வாய் இருக்கிறது என்பதற்காக பிற மனம் புண்படும் வண்ணம் பேசுவது தவறுதான் . கண்டிக்கத்தக்கது ..!
ஜாக்கிரதை! தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் நீங்கள் தண்டிக்கப்படலாம்! நல்ல வேலை பதவியில் மகாதிர் இல்லை!
நல்ல மாற்றம்.
மலாய்காரர்களில் நல்ல சிந்தனை உள்ள தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இவரே சான்று.
மலாய்காரர்களில் நல்ல சிந்தனை உள்ள தலைவர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு இவரே சான்று. (ஆசாமி ரொம்ப புகழ்கிறார்) ! அவரை அம்னோ அன்புடன் அழைத்தால் போய் விடுவார் !