டிஏபி: இஸ்மாவுக்கு எதிராக தேச நிந்தனைச் சட்டத்தைப் பயன்படுத்தத் தேவையில்லை

dap-mpமலேசிய  சீனர்களை  “வந்தேறிகள்”  என்று  வருணித்த  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா (இஸ்மா)வுக்கு  எதிராக  தேச நிந்தனைச்  சட்டம் பயன்படுத்தப்படுவதை  டிஏபி- இன்  செகாம்புட்  எம்பி  லி லிப்  எங்  எதிர்க்கிறார்.

“இஸ்மாவை  1948  தேச  நிந்தனைச் சட்டத்தின்கீழ்  விசாரிப்பது  சரியல்ல. அது, பேச்சுரிமையையும்  கருத்துரிமையையும்,  அரசியல்  எதிர்ப்பாளர்களையும்  அடக்கிவைக்க  காலனித்துவ  எஜமானர்களால் கொண்டுவரப்பட்ட  ஒரு  கொடூரச்  சட்டம்.

“கொள்கைப்  பிடிப்புள்ள  கட்சியான  டிஏபி  தேச நிந்தனைச்  சட்டத்தின்கீழ்  இஸ்மா  விசாரிக்கப்படுவதைக்  கண்டிக்கிறது”, என்றாரவர்.

இனவாத  அல்லது  ஒற்றுமையைக்  குலைக்கும்  கருத்துக்களை  வெளியிடுவோருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுக்க குற்றவியல்  சட்டங்களே  போதுமானவை  என்றாரவர்.