பாஸ்: புக்கிட் குளுகோர் வேட்பாளர் அம்னோ உறுப்பினர்

mahfuzபுக்கிட்  குளுகோரில்  போட்டியிடப்போவதாக  அறிவித்திருக்கும்  முகம்மட்  நபி  பக்ஸ்,   பாஸ்  கட்சி  உறுப்பினர்  அல்லர்.

இதனைக் குறிப்பிட்ட  பாஸ்  தகவல்  தலைவர் மாபுஸ் ஒமார்,  தம்மை  பாஸ்  உறுப்பினர்  என்று  கூறிக்கொள்ளும்  அவர்  உண்மையில்  அம்னோ  ஆள்  என்று  தெரிவித்தார்.

“அவர்  பாஸ்  உறுப்பினர்  என்று  கூறிக்கொள்வது  ஒரு  பொய்.  ஆராய்ந்து  பார்த்ததில்  அவர்  அம்னோ  உறுப்பினர்  என்பது  தெரியவந்தது”,  என்றாரவர்.