நடவடிக்கையை எதிர்நோக்கியுள்ள மாணவர்களுக்கு அமெரிக்கத் தூதரகம் உதவ வேண்டும்

umமலாயாப்  பல்கலைக்கழகம்  அதன்   மாணவர்கள்  நால்வருக்கு  எதிராக  நடவடிக்கை  எடுப்பதைத்  தடுக்க  அமெரிக்கத்  தூதரகம்  தலையிட  வேண்டும்  என  பிகேஆரின்  தேஜா  சட்டமன்ற  உறுப்பினர்  சான்  லி  காங்  வலியுறுத்தினார்.

ஏப்ரல்  27-இல்,  அமெரிக்க  அதிபர் பராக்  ஒபாமா, அப்பல்கலைக்கழகத்தில்,  தென்கிழக்காசிய  இளம்  தலைவர்களைச்  சந்திக்கும்  கூட்டத்தில்  ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டதற்காக  அம்மாணவர்கள் நடவடிக்கையை  எதிர்நோக்கியுள்ளனர்.

“கூட்டத்தை  ஏற்பாடு  செய்த  அமெரிக்கத்  தூதரகம்தான்  மாணவர்களைப்  பாதுக்காக்கவும்  பொறுப்பேற்க  வேண்டும்  எனக்  கேட்டுக்கொள்கிறேன்”,  என்றாரவர்.