உத்துசான் மலேசியா: தாய்மொழிப்பள்ளிகள் ஒழிக்கப்பட்டால் மட்டுமே … “இனம்” என்ற பகுதி அகற்றப்படலாம்

 

utusanஅரசாங்க பாரங்களில் “இனம்” என்ன என்பதைக் குறிப்பதற்கான பகுதி அகற்றப்படுவதை அம்னோவின் குரலான உத்துசான் மலேசியா ஆதரிக்க தயாராக இருக்கிறது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனையை அது முன்வைத்துள்ளது: இந்நாட்டிலுள்ள தாய்மொழிப்பள்ளிகள் அழிக்கப்பட வேண்டும்.

அந்நாளிதழின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் அதன் தலையங்கத்தை புனைப் பெயரில் எழுதும் அவாங் செலமாட் எழுதியுள்ள தலையங்கத்தில் “பங்சா மலேசியா” உருவாக்கப்படுவது அரசாங்க பாரங்களில் “இனம்” என்ற பகுதி அழிக்கப்படுவதை மட்டும் சார்ந்திருக்கவில்லை. அது ஒரே கல்வி அமைவுமுறையை உருவாக்குவதையும் சார்ந்திருக்கிறது என்று அத்தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளது.

“அரசாங்க பாரங்களில் இனம் எனபதைக் குறிப்பிடப்படும் பகுதியை அகற்றுவதற்கான கடும் நடவடிக்கைகளை ஆதரிக்க அவாங் தயாராக இருக்கிறது. “பங்சா மலேசியா” என்ற ஒன்றின் கீழ் நாம் அனைவரும் வருவது சரியான ஒன்றே.

“ஆனால், அதற்கு ஒரு நிபந்தனை உண்டு. தொல்லை தருகின்ற மிக முக்கியமான பிரச்சனையைத் தீர்க்க வேண்டும். இன அடிப்படையில் இல்லாத ஒரே பள்ளி அமைவுமுறையை ஏற்படுத்த வேண்டும்”, என்று உத்துசான் மலேசியாவின் வார இறுதி வெளியீடான மிங்குவான்utusan1 மலேசியாவில் கூறப்பட்டுள்ளது,

இல்லையென்றால், அரசாங்க பாரங்களில் “இனம்” என்பதைக்குறிப்பிடும் பகுதியை அழிக்க வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் எழுப்பக்கூடாது என்று அந்நாளிதழ் கூறுகிறது.

அரசாங்க பாரங்களில் காணும் “இனம்” என்ற பகுதி இறுதியில் அகற்றப்படும் என்று பிரதமர்துறை அமைச்சர் ஜோசெப் எந்துலு பெலாவுன் கூறியிருந்ததைத் தொடர்ந்து இந்தப் பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது.

அம்னோவின் இறுதிக் குறிக்கோளான ஒரே கல்வி அமைவுமுறை கொள்கையைப் பின்பற்ற வேண்டிய கடப்பாடுடைய பிரதமர் நஜிப் அந்த அமைச்சரை கடுமையாகக் கண்டித்தார். அமைச்சரவை அப்படி எந்த ஒரு முடிவையும் எடுக்கவில்லை என்று கூறிய பிரதமர் நஜிப், அந்த அமைச்சர் “தவறு” செய்து விட்டார் என்றார்.

அம்னோவின் “இறுதிக்குறிக்கோள்” – தாய்மொழிப்பள்ளிகளை ஒழித்து ஒரே மொழிப்பள்ளிகளை உருவாக்குதல் – அதன் இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது என்பதை உத்துசான் மலேசியா உறுத்திப்படுத்தியுள்ளது.