புக்கிட் குளுகோர் இடைத் தேர்தலில் டிஏபி-இன் ராம்கர்பால் சிங் சுயேச்சைகளான ஹுவான் செங் குவான் , முகம்மட் நபி பக்ஸ், அபு பக்கார் சித்திக் முகம்மட் ஸான் ஆகிய நால்வர் போட்டியிடுவார்கள்.
வேட்புமனு தாக்கல் செய்யும் நடைமுறை சுமூகமாக நடைபெற்றது எனத் தேர்தல் ஆணையத் தலைவர் அப்துல் அசீஸ் கூறினார்.
“ஐந்து வேட்புமனுக்கள் கிடைக்கப்பெற்றன. ஒரு சுயேச்சை வேட்பாளர் உரிய நேரத்தில் வைப்புத் தொகையைக் கட்டாததால் போட்டியிடும் தகுதியை இழந்தார். எனவே, இது நான்கு-முனைப் போட்டியாக அமைகிறது”, என்றாரவர்.
பிஎன் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால், பிஎன் தலைவரும் பிரதமருமான நஜிப் அப்துல் ரசாக், பிஎன்-ஆதரவு வேட்பாளரை ஆதரிக்கப்போவதாகக் கோடி காட்டியுள்ளார்.
அந்த பிஎன்-ஆதரவு வேட்பாளர் யார்?
மச்சான் உங்கள்ளு வேலை ஈளாஈயாஃ
உங்களது டெபொசிட் பணம் போச்சா. மாப்பு வேசிட்டாண்டா ஆப்பு .
அரசாங்கமே இவருக்கு பயபடுகிறதே ,என்ன கொடும சரவணா