‘பார்டி சாரி மாகான்’பிஎன்னுக்காக போட்டியிடுகிறதாம்: அஸ்மின் கூறுகிறார்

proxyபுக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தலில்  பிஎன்  போட்டியிடவில்லை  என்றாலும்,  தனக்குப்  பதிலாக  வேறொரு  கட்சியை  அது  களமுறக்கி  இருப்பதாக  பிகேஆர்  துணைத்  தலைவர்  அஸ்மின் அலி  கூறினார்.

பார்டி சிந்தா  மலேசியா(பிசிஏ)-வைத்தான்  அவர்  குறிப்பிட்டார். அதை  “பார்டி  சாரி  மாகான் (Parti Cari Makan)”  என்றும்  கேலி  செய்தார்.

பிசிஎம்  உதவித்  தலைவர் ஹுவான்  செங்  குவான்,  அந்த  நாடாளுமன்றத்  தொகுதிக்காக  போட்டியிடும்  நான்கு  வேட்பாளர்களில்  ஒருவராவார்.

ஆளும்  கட்சிக்கும்  அதன்  தலைவரான  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்குக்கும்  போட்டியிடுவதற்கு  ஒரு  வேட்பாளர்  கிடைக்கவில்லையே  என்று  அஸ்மின்  அங்கலாய்த்துக்கொண்டார்.

“10 பேரைக்  கொண்டுவர  வேண்டாம்,  ஒரே ஒருவர்  போதும்.  ஆனாலும்,  அவரால்  முடியவில்லை. பார்டி  சிந்தா  மலேசியாவைப்  போட்டியிட  நியமித்திருக்கிறார்”,  என   செய்தியாளர்களிடம்  அவர்  தெரிவித்தார்.

இதனிடையே, தாம்  பிஎன்னால்  நியமிக்கப்பட்ட  வேட்பாளர்  என்று  கூறப்படுவதை  மறுத்த ஹுவான்,   தம்  கட்சியின்  அடையாளச்  சின்னத்தில்தான்  போட்டியிடுவதாகக்  கூறினார்.