திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட் பதவி துறந்தார். ப்திய மந்திரி புசாராக செபராங் தகிர் சட்டமன்ற உறுப்பினர் அப்துல் ரசிப் அப்துல் ரஹ்மான் இன்றிரவு இஷ்யா தொழுகைக்குப் பின்னர் பதவி ஏற்பார் எனத் தெரிகிறது.
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்குடன் செய்துகொள்ளப்பட்ட ஓர் உடன்பாட்டின்படி அஹ்மட் சைட் பதவி விலகுவார் என்று பரவலாகவே பேசப்பட்டு வந்தது.
கடந்த ஆண்டு 13வது பொதுத் தேர்தலில் திரெங்கானு கிட்டத்ட்ட கைநழுவிப் போகும் நிலை ஏற்பட்டதை அடுத்து அஹ்மட் சைட் ஓராண்டு மட்டும் மந்திரி புசாராக இருந்துவிட்டு விலகுவது என்று உடன்பாடு காணப்பட்டதாம்.