திரெங்கானுவில் முன்னாள் மந்திரி புசார் அஹமட் சைட் உள்பட மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து விலயதைத் தொடர்ந்து பிஎன் சிறுபான்மை அரசாகியுள்ளதால் மாநிலச் சட்டமன்றம் கலைக்கப்பட வேண்டும் என்று அரசமைப்புச் சட்ட வல்லுனர் ஒருவர் கேட்டுக்கொண்டிருக்கிறார்.
அரசமைப்புப்படி பிஎன் அங்கு தொடர்ந்து ஆட்சி செய்வது இயலாது என அப்துல் அசீஸ் பாரி கூறினார்.
“சுல்தான் சட்டமன்றத்தில் பெரும்பான்மை பெற்றுள்ள கட்சியை நியமிக்க வேண்டும் அல்லது மன்றத்தைக் கலைக்க வேண்டும். மாநிலச் சட்டமன்றத்தைக் கலைப்பதே மேலானது என நினைக்கிறேன்”, என அசீஸ் மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சட்ட வல்லுனர்கள் சொல்வது அம்னோ காதுகளில் விழவே விழாது. சட்டன் என் கையில் என்ற இறுமாப்பும் தலைகனமும் இவர்களுடன் உடன் பிறந்ததே….சட்ட மன்றத்தை கலைத்து மக்களிடமே மறுபடியும் முடிவு எடுக்க வழிவிடவேண்டும்…!!!!!!இதுவே ஜனநாயகம் மறு மலர்ச்சி பெற வழிவகுக்கும்…நடக்குமா இந்த அம்னோ ஆட்சியின் கீழ்???? ஆளுநரும் அம்நோவின் கைப்பாவையாக இல்லாமலிருந்தால் மக்களுக்கு நல்லது என்பதே என் கருத்து…!!!!
நல்ல ஆலோசனை !
பேராவில் அப்போதைய சூழ்நிலையில் சட்ட மன்றத்தை
கலைத்திருந்தால் அன்றே கிடைத்திருக்குமே
அவர்களுக்கு ‘பெரிய ஆப்பு’ . அரண்மனை மக்களின் கோரிக்கைக்கு
காதை கொடுக்க வில்லையே !!! இது திரங்கானுவில் நடந்ததால்
ஆச்சரியப் படுவதற்கில்லை.!!!!
நாம் ஆசைப்டுவதைப்போல நடக்குமா? சந்தேகம்தான் இதை சரிபண்ண அம்னோ என்ன விலையானாலும், எத்தகைய சூழ்ச்சி யானாலும் அம்னோவையே பணயம் வைத்து செய்ய இந்நேரம் முடிவெடுத்திருக்கும். வேலை நடந்துக்கொண்டிருக்கும். பொறுத்திருந்துப் பார்போம் .
BN அரசுக்கு இப்போதுதான் கச்சேரி கலை கட்டுகிறது ! அம்னோவுக்கு கொழுப்பு உருகி கரையும் நாள் வெகு தூரம் இல்லை !