மூன்று சட்டமன்ற உறுப்பினர்கள் அம்னோவிலிருந்து விலகி தங்களைச் சுயேச்சைகளாக அறிவித்துக் கொண்டிருந்தாலும்கூட திரெங்கானுவில் பிஎன் அரசே தொடர்ந்து ஆட்சி செய்யும் என மாநிலச் சட்ட ஆலோசகர் அஸ்ஹார் அப்துல் ஹமீட் இன்று கூறினார்.
சட்டமன்றத்தில் பிஎன் உறுப்பினர் எண்ணிக்கை 17-இலிருந்து 14-ஆகக் குறைந்து எதிரணியினர் எண்ணிக்கை 15 ஆக இருப்பதாகக் கூறப்பட்டாலும் அது அப்படி அல்ல என்று அஸ்ஹார் கூறினார். சட்டமன்றத் தலைவரும் ஆளும் கட்சியைச் சேர்ந்தவர்தான் என்றாரவர். அவரையும் சேர்த்தால் சட்டமன்ற இட நிலவரம் வருமாறு: பிஎன் 15: பக்காத்தான் ரக்யாட் 15: சுயேச்சைகள் 3.
இது என்ன அம்னோ சட்டமா??? சமநிலை ஏற்பட்டாலொழிய சட்டமன்றத் தலைவரின் எண்ணிக்கையை ஆளும் கட்சியுடன் சேர்த்து எண்ணிக்கையில் கொள்ளலாம்…. மாநில சட்ட ஆலோசகர் அம்னோ சட்ட ஆலோசகர் டத்தோ ஹஸ்பாரிசாமிடமிருந்து ஆலோசனை பெற்றாரோ?????? மலேசியா பொலேஹ்…….!!!!
இனிமேல் பாரிசான் நரி ஆட்டம் ஆட ஆரம்பிக்கும். பேராகில் நடந்தது இனிமே திரங்கனுவில் ..
சட்டமன்றத் தலைவர் பொதுவானவர் …. ஆகா பிஎன் 14.5 : பக்காத்தான் ரக்யாட் 15.5 சுயேச்சைகள் 3.
‘அம்னோவின் சட்டம்’ ஓர் இருட்டறை !!
அதில் எங்கே தூய்மையான நீதிமான்களை தேடுவது ???
பொறுத்திருப்போம் ‘பெரிய பேரம்’ விளையாடும் !!!
விலகிய மூவரும் உறுதியானவர்களா ????
ஓரிரு நாள்களில் அவர்களின் உறுதி தெரிந்து விடும் !!!!
மேலும் மூவர் விலகினால் சிறப்பு …
சட்ட ஆலோசகர் அரசு ஊழியர்!! வாங்கும் கூலிப் பணத்திற்கு
இதையாவது சொல்லித் தானே ஆகவேண்டும் !!!
முதலாலி(முதலை)களின் மனம் குளிர !!!!
பேராக் டேவான் ஸ்பீக்கர் yb சிவகுமாரை நாற்காலியுடன் தூக்கி எரிந்தது ஞாபகத்துக்கு வந்தது ! திரங்கானுவில் நடக்குமா ?
தமிழர் நந்தா அது நடக்கணும் ,இவர் யார் சட்டமன்றத்தை கலைக்க வேண்டாம் என்று சொல்வதற்கு.பெராக்கில் நடத்துதான் இங்கும் நடக்க வேண்டும் பாகத்தான் ராக்யாட் சும்மா விடாதிர்கள் குரல் எழுப்புங்கள் ஆட்சி மாற்றம் தேவை ஜி எஸ் தி ஒழிக்க வேண்டும்.