போலீஸ் சீரமைப்புக்கு ‘மக்கள் நாடாளுமன்றம்’

ongபோலீசில்  சீரமைப்பைக்  கொண்டுவரும்  நோக்கில்  மனித  உரிமைக்காக  போராடும்  என்ஜிஓ-களான  சுவாராமும்  எம்னெஸ்டி  இண்டர்நேசனலும்   மே  31ஆம்  நாள், பினாங்கு  சட்டமன்றக்  கட்டிடத்தில்,  ‘மக்கள்  நாடாளுமன்ற’  நிகழ்வைக்  கூட்டாக  ஏற்பாடு  செய்துள்ளன.

அதை  ஒட்டி  போலீஸ்  காவலில்  நிகழ்ந்துள்ள  இறப்புகள்  பற்றிய  கண்காட்சி ஒன்றும்  நடத்தப்படும். அந்த  வகை  இறப்புகள்மீது  பொதுமக்களின்  விழிப்புணர்வை   மேலோங்கச்  செய்வதே  அதன்  நோக்கமாகும்.

மக்கள்  நாடாளுமன்றம்,  போலீஸ்  படையைச்  சீரமைப்புக்காக முன்வைக்கப்படும்  தீர்மானங்கள்மீது  கவனம்  செலுத்தும்  என  அந்த  என்ஜிஓ-களின்  பேச்சாளர்  ஒங்  ஜிங்  செங்  கூறினார்.

“2005-இல், துன்  ஜைடின்  போலீஸ் ஆணைய  அறிக்கை 125  பரிந்துரைகளைப்  பட்டியலிட்டிருந்தது. போலீசின்  தவறான  நடத்தையையும்  போலீஸ் மீதான  புகார்களையும்  விசாரிக்க  தனி  ஆணையம்  அமைக்கவும்  அது பரிந்துரைத்தது. ஆனால்,  அது  நடக்கவில்லை”, என்றாரவர்.