ஜிஎஸ்டியைத் தவிர்ப்பது எளிது : துணை அமைச்சர்

ahmadபொருள்,  சேவை  வரி   பெரும்பாலோரைப்  பாதிக்காது.  அதை  அறியாத  மக்கள்தான்  ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபடுகிறார்கள்  என்கிறார் நிதி  துணை அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்.

ஜிஎஸ்டி,   செயலாக்கம்கண்ட  இரண்டாம்  ஆண்டிலிருந்து  அரசாங்கத்துக்குக்   ரிம9பில்லியன்  கூடுதல்  வருமானத்தைக்  கொண்டுவரும்  என்றாலும்,  அந்த  வரியால்  அன்றாடம்  பயன்படுத்தும் 90விழுக்காட்டுப் பொருள்களின் விலைகளில்  மாற்றமிராது,  சில  பொருள்களின்  விலை  குறையவும்  கூடும்  என  அஹ்மட்  கூறினார்.

“மக்கள்  ஜிஎஸ்டி-யால்  அறவே  பாதிக்கப்படாமல்  வாழ  முடியும்”,  என்றாரவர்.

“அடிப்படை  உணவுப்  பொருள்களுக்கு  வரிவிலக்கு  அளிக்கப்பட்டுள்ளது- அரிசி, மாவு,  சீனி,  உப்பு, பயிறு,  மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி,  கோழி,  வாத்து  ஆகியவற்றுக்கு   வரி  இல்லை.  முட்டை,  காய்கறிகள்,   நெற்றிலி  முதலிய  கடல் உணவுகள்,  கருவாடு,  குடிநீர்  போன்றவற்றுக்கும் வரிவிலக்கு  உண்டு”,  என்றவர்  சொன்னார்.