ஒரு திருமணத்தால் திரெங்கானுவில் அம்னோ ஆட்சியே பறிபோக விருந்தது. ஆனால், “கட்சிமீதுள்ள பாசம்” எல்லாத் தப்பெண்ணங்களையும் கலைந்து விட்டது எனப் பிரதமர் கூறினார்.
திரெங்கானு அரசியல் நெருக்கடிக்குத் தீர்வு காணப்பட்டிருப்பதால், நஜிப் அப்துல் ரசாக் மே 17-இல் கெமாமானில் முன்னாள் மந்திரி புசார் அஹ்மட் சைட்டின் புதல்வியின் திருமண உபசரிப்பில் கலந்துகொள்ள தடை ஏதும் இருக்காது.
எல்லாவற்றுக்கும் தப்பான புரிதலே காரணம் என்றாரவர்.
“மே 10ஆம் தேதியே எல்லாம் முடிந்து விட்டதாக நினைத்தோம்.
“மே 17-இல் இன்னொரு உபசரிப்பு இருப்பது எங்களுக்குத் தெரியாது”, என அஸ்ட்ரோ அவானியிடம் நஜிப் தெரிவித்தார்.
எல்லாவற்றுக்கும் தொடர்பில் ஏற்பட்ட பிரச்னைதான் காரணம் என்று குறிப்பிட்ட அவர், இப்போது எல்லாம் சரியாகிவிட்டது என்றார்.
அட பாவிங்களா ! ஒரு திருமண விருந்திற்காக ஆட்சியையே கவிழ்க்க பார்கிரர்களே …..
நல்ல ரத்த பாசம் போங்க…
மாறி மாறி…மக்கள் பணத்தை கொடுத்து ஒரு ஒரு வழி …விட்டீர்கள் மானம் கெட்ட ஜென்மங்கள் ..
ஆமாம் ஆமாம் மிக மிக பெருமைக்குரிய விஷயம். …….பாசம்????? இதுவே கூடுதல் இடங்கள் கை வசம் இருந்திருந்தால்…… தெரிந்திருக்கும்….. இந்த பாசத்தின் ‘வேஷம்’……….. எல்லாம் நேரம் …. தான்!!!!
நம்மூர் அரசியலில் இதுவெல்லாம் சர்வ சாதாரம் அப்பா .
பாசம் மலர் படம் பார்ட் 2