சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலிட் இப்ராகிம் பண அரசியலில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டிய முன்னாள் காப்பார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம் பிகேஆரிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
விசாரணை முடியும்வரை இடைநீக்கம் அமலில் இருக்கும் என பிகேஆர் ஒழுங்கு வாரியத் தலைவர் டான் டீ குவோங் கூறினார்.
மாணிக்கவாசகம் கோலா சிலாங்கூர் பிகேஆர் தலைவர் பதவிக்கு அப்துல் காலிட்டை எதிர்த்துப் போட்டி இடுகிறார்.
மந்திரி புசாருக்கு எதிரான அவரது குற்றச்சாட்டு மே 11-இல் மைய நீரோட்ட செய்தித்தாள்களில் வெளியிடப்பட்டிருந்தது.
அந்த வகையில், மாணிக்கவாசகம் கட்சித் தேர்தல் மீதான சர்ச்சைகளை ஊடகங்களுக்குக் கொண்டு செல்லக்கூடாது என்ற கட்சியின் கட்டுப்பாட்டை மீறி விட்டார் என டான் கூறினார்.
இந்தியர்களே இங்கே பாருங்கள் நம் தோழருக்கு கொடுக்க பட்ட வெகுமதியை.நாட்டில் எங்கே தவறு நடந்தாலும் தட்டி கேககுடிய இவரை இடைநீக்கம் செய்வதா ?இது பிகேஆர் கட்சிக்கு நல்லது அல்ல.இவரை வெளியேற்றினால் இந்தியர்கள் கொந்தளித்து விடுவோம்.அன்வர் அவர்களே நீங்கள் தலை இட்டு இந்த பிரசனையை சுலபமாக தீர்த்து வையுங்கள் இலையேல் உங்களுக்கு தலைவலி காத்துகிட்டு இருக்கு இந்தியர்கள் மத்தியில் கவனம் தேவை .
ம் இ க குரல்போல் இருக்குது
தமிழனுக்கு பிகேஆர் நல்லா ஆப்படிகிறான் ..
தமிழன் சேவியருக்கு அப்படிச்சான் .. யாருக்கும் அஞ்சாது குரல்கொடுக்கும் மாணிக்காவுக்கும் ஆப்பு . இப்ப மீதமிருகிறது கருப்புதோல் வெள்ளகாரனும் சந்து கோயிலுக்கு கொடிபிடிகிரவனும் மீதம் .. இன்னுமொரு சமுகம் சைக்லே கேப்ல பெரிய லொறியே ஓட்டிகிறது .. தமிழனுக்கு வாய்த்தான் உமைதொரை .. எல்லாம் தமிழன் கெட்ட நேரமாம் .. கபாலி வாழ்க அவன் நாமம் வாழ்க வாழ்க
அரசிலில் இது எல்லாம் சகஜம்பா