முன்னாள் திரெங்கானு மந்திரி புசார் அஹ்மட் சைட், பாஸ் தம்மை அக்கட்சிக்கு இழுக்கப் பார்த்தது என்று சொல்வது ஒரு பொய்.
“உண்மையில் அவர்தான் பாஸில் சேரும் நோக்கில் எங்களைத் தொடர்பு கொண்டார்”, என பாஸ் மத்திய செயல்குழு உறுப்பினர் சைட் அஸ்மான் சைட் அஹ்மட் நவாவி மலேசியாகினியிடம் தெரிவித்தார்.
சினார் ஹரியானில், பாஸ் அஹ்மட்டைத் தன்னுடன் சேர்ந்துகொள்ள அல்லது தனக்கு ஆதரவாக செயல்பட அழைத்தது என்று வெளியான செய்தியை மறுத்த பத்து பூரோக் சட்டமன்ற உறுப்பினரான சைட் அஸ்மான் இவ்வாறு கூறினார்.
அப்படியே அவர்கள் (PAS) அழைத்திருந்தாலும் இவனின் புத்தி எங்கே போனது…