நேற்று இரு கன்னித்துறவிகளைத் தாக்கிக் கடுமையாகக் காயப்படுத்திய கயவர்களை அதிகாரிகள் பிடிக்க வேண்டும் என்று மசீச இன்று வலியுறுத்தியது.
சிரம்பான் விசிடேஷன் தேவாலயத்தில் மூத்த கன்னித்துறவிகள் இருவர் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்தை வருணிக்க வார்த்தைகளே இல்லை என்று மசீச மகளிர் உதவித் தலைவர் ஒங் சொங் ஸ்வென் கூறினார்.
“போலீஸ் எல்லா விதத்திலும் முயன்று அந்தக் கோடூரக் குற்றவாளிகளைப் பிடிக்க வேண்டும். அந்த வட்டாரத்தில் போலீஸ் காவல் சுற்றையும் அதிகரிக்க வேண்டும்”, என்றவர் கேட்டுக்கொண்டார்.
தாக்கப்பட்ட இருவரும் கடும் காயங்களுக்கு ஆளானார்கள். ஒருவர் மோசமான நிலையில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.
திருடர்கள் இப்படிச் செய்வதற்கு வாய்ப்பில்லை. அவர்களிடம் பணம் இருக்காது என்பதும், அவர்கள் துறவிகள் என்பதும், பார்ப்பவர்களுக்குத் தெரியும். அப்படிப் பட்டவர்களை மிகவும் கடுமையான முறையில் தாக்கியிருப்பது கண்டிப்பதற்குரியது. கிறிஸ்துவர்களுக்கு எதிரான தாக்குதல் என்றே தோன்றுகிறது.
சும்மா அறிக்கை விட்டுப் பயனில்லை. தைரியமிருந்தால் காவல் துறையை நேரிடையாகவே தாக்குங்கள். அப்பொழுத்தான் அங்கு தலைமை ஏற்றிருக்கும் ஓர் எருமைக்கு ரோசம் வரும். அதுகூட இருக்கின்றதா என்றே சந்தேகம்தான்.
கொடுமை இளைத்த கையவர்களை தண்டிக்கப்பட வேண்டும் காவல் துறை தேடும் பணியை துரித படுத்த வேண்டும்.இன்னும் ஒரு அவலம் நடை பெறமால் இருக்க காவல் துறை ரோந்து பணியை கடுமையாக்க வேண்டும்.
umno gangster and ibrahim ali