ஜிஎஸ்டி வந்தால் மைலோ விலை, மெக்கி விலை உயருமா?

miloபொருள்,  சேவை  வரி(ஜிஎஸ்டி)யிலிருந்து  அத்தியாவசிய  பொருள்களுக்கு  விலக்களிப்பட்டிருப்பது  ஒரு  புறமிருக்க  சராசரி  மலேசியர்கள் பயன்படுத்தும்  மற்ற  பொருள்களின்  நிலை  என்னவாகும் என  விளக்கம்  தேவை  என்று மசீச  கேட்டுக்கொண்டிருக்கிறது.

ஜிஎஸ்டி-யால்   பெரும்பாலான பொருள்களும்  சேவைகளும்  விலை  உயரா  என்று   “பொதுப்படையாக”  சொல்லிக் கொண்டிருப்பது  போதாது  என  மசீச  உதவித்  தலைவர்  சுவா  டீ  யோங்  கூறினார்.

எந்தெந்தப்  பொருள்கள் பாதிக்கப்படும்  என்பதே  பொதுமக்களுக்குத்  தெரியாமலிருக்கிறது.

“எடுத்துக்காட்டுக்கு,  ஜிஎஸ்டி-யால்  நெஸ்கபே,  மைலோ,  தேயிலை,  சமையல்  எண்ணெய்,  மெக்கி  மீ  போன்றவை  என்னவாகும்.

“அந்த  689  பொருள்கள்  பற்றிய  தகவலை  அரசாங்கம்  வெளியிட  வேண்டும். அப்போதுதான்  ஜிஎஸ்டி-இன்  தாக்கத்தை மக்களால் மேலும்  நன்றாக  புரிந்து  கொள்ள  முடியும்”,  என்றவர்  கூறினார்.

நிதி  துணை  அமைச்சர்  அஹ்மட்  மஸ்லான்  அன்றாடம்  பயன்படுத்தும்  689  பொருள்கள்  அவ்வரி  விதிப்புக்கு  உள்ளாகும்  என்றும்  ஆனால்,  அவற்றில்  பாதிப்  பொருள்களின்  விலைகள்  உயரா  என்றும்  குறிப்பிட்டிருந்தது  பற்றிக்  கருத்துரைத்தபோது  சுவா  இவ்வாறு  கூறினார்.