திரெங்கானு அரசியல் நெருக்கடியைக் கையாண்ட விதம் குறித்து வாசகர்கள் தெரிவித்த கருத்துகளை வெளியிட்டிருந்த மலேசியாகினிக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவதாக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் மிரட்டி இருக்கிறார்.
ஹபாரிஸாம் வான் மற்றும் அய்ஷா முபாராக் வழக்குரைஞர் நிறுவனம் மூலமாக நேற்று மலேசியாகினிக்கு கடிதம் ஒன்று கொடுக்கப்பட்டது.
அக்கடிதத்தில், ‘பிரதமர், விதைத்ததை அறுவடை செய்கிறார்’, ‘திரெங்கானுவை வைத்துக்கொள்ள நஜிப் எவ்வளவு செலவிடுவார்’ என்ற தலைப்புகளில் தொகுத்து வெளியிடப்பட்டிருந்த வாசகர்களின் கருத்துகள் அவதூறானவை என்று கூறப்பட்டிருந்தது.
மேலும், ஆறு வாசகர்கள் தெரிவித்த கருத்துகள் தேச நிந்தனை செய்பவை எனவும் பிரபல அம்னோ வழக்குரைஞர் முகம்மட் ஹபாரிஸாம் ஹருன் கையொப்பமிட்டிருந்த அக்கடிதம் கூறிற்று.
நெருக்கடியை உருவாக்கியவர்கள், அம்னோ மேலிடத்தை மிரட்டியவர்கள், மாநில ஆட்சி நிலைத்தன்மையை அசைத்துப் பார்த்தவர்களை விட்டு விட்டு பொதுமக்களிடம் பாயும் பிரதமர் தன் இயலாமையை வெளிப்படுத்திக் கொள்கிறார். ஒரு பிரதமருக்கு இது அழகல்ல.
மக்கள் கொண்டுள்ளது அவநம்பிக்கை. அதை நிவர்த்தி செய்வது நம்பிக்கை நாயகனின் கடமை. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் மக்களின் அதிர்ப்தி கருத்துக்கணிப்புக்கு எதிராக வழக்கு தொடுக்கப்போவது ஒரு தலைவருக்கு அழகல்ல….
எக்காலத்தில் இவனைப்போன்றவன்கள் நேர்மையுடன் அரசியலில் சாதித்துள்ளனர்? இவன் எல்லாம் தலைவன்கள்.
அம்னோவைப் பற்றிப் பேசினாலே அது தேச நிந்தனைச் சட்டத்தின் கீழ் வரும்! ஜாக்கிரதை!
நஜிப் ப…