சைட்: எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றும் கபடதாரி நஜிப்

zaidஒரு பொறுப்பான  பிரதமர்  நாட்டை  எரித்துவிடக்கூடிய  நெருப்பை  நீரை ஊற்றி  அணைக்கப்  பார்ப்பார், எரியும்  நெருப்பில்  எண்ணெய்  ஊற்ற  மாட்டார். ஆனால்,  நஜிப்  அதைச்  செய்யத்  தவறிவிட்டார்  என்கிறார்  சைட்  இப்ராகிம்.

பொதுத்  தேர்தலுக்குமுன்  தம்மை  சீர்திருத்தவாதி  என்று  பிரகடனப்படுத்திக்கொண்ட  பிரதமர்  இப்போது  ஈக்காத்தான்  முஸ்லிமின்  மலேசியா(இஸ்மா)வின் போராளிபோல்  பேசுவது  ஏன்  என்றவர் வினவினார்.

நஜிப்பின்  பொறுப்பற்ற  பேச்சுக்களைக்  கண்டித்த  சைட்,  பிரதமர்  நியாயத்தின்  குரலாக,  மிதவாதத்தின்  குரலாக  இருத்தல்  வேண்டும்  என்றார்.

“பொறுப்பான  பிரதமர்  எரியும்  நெருப்பில்  எண்ணெய்  வார்க்க  மாட்டார்”, என்றாரவர்.

தாராண்மைவாதத்தின்  அபாயங்கள் மற்றும்  இஸ்லாத்துக்கு  ஏற்பட்டுள்ள  மிரட்டல்கள் பற்றி   நஜிப் அண்மையில்  குறிப்பிட்டது பற்றி  தம்  வலைப்பதிவில்  கருத்துரைத்தபோது  சைட்  இவ்வாறு  கூறினார்.