தெலுக் இந்தான்: இனவாதத் தடைகளைத் தகர்க்க டியானா

 

DAP-- Dyana1எதிர்வரும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற தொகுதி இடைத்தேர்தலில் டிஎபியின் வேட்பாளராக டியானா சோபியா முகமட் டாவுட் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக டிஎபி இன்று அறிவித்தது.

டியானா, 27, யுஐடிஎம் பட்டதாரியும் வழக்குரைஞருமாவார். அவரது நியமனத்தை டிஎபியின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் இன்று தெலுக் இந்தான் டிஎபி தேர்தல் நடவடிக்கை மையத்தில் அறிவித்தார். இது டிஎபி  ஓர் இன பல்வகைமைக் கட்சி என்பதை நிரூபிக்கிறது என்று அவர் கூறினார்.

டிஎபியின் மூத்த தலைவரான லிம் கிட் சியாங்கின் அரசியல் செயலாளராக கடந்த ஓர் ஆண்டுகளாக பணியாற்றிய டியானா இன மற்றும் சமயத் தடைகளை உடைத்தெறிய வேண்டியதின் அவசியம் குறித்து பேசினார்.

தம்மைப் பற்றி சில வலைதளங்களில் தவறான தகவல் மற்றும் கருத்துகள் தெரிவிக்கப்பட்டுள்ளதைச் சுட்டி காட்டிய டியனா, “அவற்றை எல்லாம் கண்டு நான் பயந்து ஓடி விடுவேன் என்று நினைக்கிறார்கள். மன்னிக்க வேண்டும். அதெல்லாம் நடக்காது”, என்றார்.

அம்னோவை ஆதரிக்கும் குடும்பத்திலிருந்து வந்தவரான டியானா கடந்த 2011 ஆண்டு மத்தியில் டிஎபியில் சேர்ந்தார்.