மே 31 இல் நடைபெறவிருக்கும் தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் அத்தொகுதியில் பதிவு செய்யப்பட்டுள்ள மொத்த 11,700 இந்திய வாக்காளர்களில் 70 விழுக்காட்டினரை மஇகா பின் வேட்பாளருக்கு ஆதரவாகத் திரட்ட முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளது என்று மஇகா தலைவர் ஜி. பழனிவேல் இன்று தெலுக் இந்தானில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசியபோது கூறினார்.
அந்நிகழ்ச்சியில் பேராக் மாநில மந்திரி புசார் டாக்டர் ஜாம்ரி அப்துல் காடிர், கெராக்கான் தலைவர் மா சியு கியோங் மற்றும் பேரா மாநில சட்டமன்ற தலைவர் எஸ்.கே.தேவமணி ஆகியோரும் இருந்தனர்.
அப்படித் தோல்வி அடைந்தாலும் இந்திய வேட்பாளர்கள் பாரிசனுக்குத் தான் ஓட்டுப் போட்டாளர்கள் என்று அடித்துச் சொல்லுங்கள். நாங்களும் ஆமாம் ஆமாம் என்று உங்களுக்காகத் தலையாட்டுவோம்!
முதலில் இந்தியர்களின் ஓட்டு கணக்கு காட்டும் இந்த தலைவர் எப்போது இந்த பக்கம் வந்து இவர்களின் குறைகளை கண்டறிந்து உள்ளார்! 8190 வாக்கு சுளையாக கிடைக்கும் என்கிறார் ! இங்குள்ள பாமர மக்கள் இக்கால நிகழ்வுகளை நன்றாக புரிந்து கொண்டுள்ளனர்
வந்து பாரும் .. ஒரு சிறந்த மாணவி 3.99 மிகச்சிறந்த தேர்ச்சி பெற்றும் இந்த பழனி வேலும் தேவமனியும் அரசாங்க உபகார சம்பளம் பெற்று கொடுக்க முடியவில்லை … ஆனால் 600 மலாய்க்காரர்கள் லண்டனில் இம் மாணவி தொடர்ந்து முனைவர் பட்ட படிப்பு பல்கலைகழகத்தில் அரசங்க உதவியுடன் படிக்கிறார்கள் ! பதவிக்கு உட்கருத்து ……..பதவியில் இருக்கும்போது பசித்திருக்க வேண்டும் மக்களுக்கு சேவை செய்ய .. தனித்திருக்க வேண்டும் தலைவன் நான் என்பதை நிரூபிக்க …., விழித்திருக்க வேண்டும் நம் இந்தியர்களுக்கு என்ன நிகழ்கிறது என்பதை கண்டுகொண்டு காரியத்தில் ஈடுபட … சும்மா குண்டு சட்டிக்குள் குதிரை ஓட்ட வேண்டாம் ….
1978ல் என் சொந்த முயற்ச்சியில் லண்டனில் வேலை பார்த்த போது அப்போதே மலாய்க்காரர்கள் அதிகமாக அங்கு படித்து கொண்டிருந்தனர். அந்நாளில் இருந்து இதுநாள் வரை எவ்வளவு பேர் நம்முடைய பணத்தில் படித்து இன்று நம்மை கேவலமாக பேசுகின்றனர்? அதிலும் காகாதிர் பதவிக்கு வந்த பின் எல்லாமே இவன்கள் மயமே -கேட்க சாமி க்கு நேரமில்லை– அதிலும் maika _ வழி நம்முடைய பணத்தை சுரட்ட வழி செய்து கொண்டிருந்தான். அப்படி இருக்கையில் எப்படி இவன்கள் எல்லாம் நம்மவர்களுக்கு உதவி செய்ய முடியும்– அதிலும் மானம் ஈனம் சூடு சொரணை இல்லா நம்மினம் கேவலமாக இவன்களையே பதவியில் அமர்த்தியது. இதை விட என்ன கேவலம் நமக்கு தேவை?
போங்கயா அவுட்டா சாமிகள்
இப்படி சொல்லியே பின் கிட்ட இருந்து காசு புடிங்கி சாப்பிடறதுக்கு பதிலா போய் …பிச்சை எடுக்கலாம் .பின் க்கு இந்தியர்களுடிய ஆதரவு வெறும் 35 சதவீதம் தான்…! 70 சதவிதம் எங்கிருந்து வருது ………..
முதலில் 10% சதவிதமாவது கிடைக்க வழிபாரும் ஐயா..?
தேர்தல் என்றவுடன் 1 மலேசியா எவ்வளவு வேகமாக வேலை செய்கின்றது பார்த்தீர்களா? ஊமைத்துரையும் வாய் மலர்ந்து பேச ஆரம்பித்து விட்டாரே?. இன்னும் மாதம் முடியில் வரையில் அங்குள்ள இந்தியர்களுக்கு ஆட்டுக் கறியும் (எருமை மாட்டு இறைச்சி அதனுடன் கலந்து), கோழிக் கறியும் கூடிய பிரியாணி சோறு இடை விடாமல் கிடைக்கும். தே.மு. -க்கு ஓட்டுப் போடும் இந்தியர்களைப் போன்ற மடையர்கள் வேறு யாரும் இருக்கப் போவதில்லை. இதற்க்கு ஒரே ஒரு காரணம் போதும். மலேசியாவில் எல்லா இனத்து மாணவர்களும் 5-ம் படிவம் வரை படிக்க ஏதோ ஒரு வகையில் அதிக வேற்றுமை இல்லாமல் பயணம் செய்ய முடிகின்றது. ஆனால், S.P.M. தேர்வு முடிந்தவுடன் பூமிபுத்ரா அல்லாத மாணவர்களின் நிலை என்ன?. இங்கேதான் இந்நாட்டில் கல்வியில் அதிக பட்ச இன பாகுபாடு காண்பிக்கப் படுகின்றது. பூமிபுத்ரா மாணவர்களுக்கு டிப்ளோமா, பல்கலைகழகத்தில் சேர ‘foundation’ கல்வி, மெட்ரிகுலேசன் என்று கணக்கு வழக்கு இல்லாமல் கல்வி வசதிகள் செய்து தரப் படுகின்றன. ஆனால், பூமிபுத்ரா அல்லாத மாணவர்களுக்கு அரசாங்கத்தின் சார்பில் வழங்கும் கல்வியின் நிலை என்ன?. ஒன்று 6-ம் படிவம் படித்து பல்கலைகழகத்திர்க்குச் செல்ல வேண்டும். மேட்ரிகுலேசனில் நம் மாணவர்களுக்கு கிடைத்த இடம் 1,500 இதில் நல்ல நிலையில் தேர்ச்சிப் பெற்ற பல வசதி படைத்த மாணவர்கள் மெட்ரிகுலேசன் வாய்ப்பை நிராகரித்து விட்டதாக தெரிகின்றது. 7A-க்கள் பெற்ற நம் மாணவர்களுக்கு மெட்ரிகுலேசன் கிடைக்கவில்லை. ஆனால் 2A – க்கள் பெற்ற ஒரு மலாய்க்கார மாணவிக்கு UiTM-ல் ‘English as 2nd language’ பயிற்சிக்கு இடம், IIUM- ல் ‘Foundation in Law’ (Bumiputra only) படிக்க இடம், மெட்ரிகுலேசன் அறிவியல் படிக்க இடம் என்று 3 இடத்துக்கும் தெரிவு செய்யப் பட்டவள் எந்த பயிற்சிக்கு போவதென்று முடிவு செய்ய முடியாமல் யோசித்துக்கு கொண்டிருக்கின்றாள்!. பாருங்கள் S.P.M. பரீட்ச்சை முடிந்தவுடன் 1 மலேசியா தலை விரித்து ஆடும் கோலத்தை!. ஊமைத் துரையை தெலுக் இந்தான் நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரத்தில் இதனை விளக்கச் சொல்லுங்கள் பார்ப்போம்?. தேர்தலில் ம.இ.க. காரர்கள் பொய்யுரைக்கும் போது மூலைக்கு மூலையில் இருந்து செருப்பு பறக்க வேண்டும். புத்தி வரும் வரை.
கவனம் டுடப்பைகட்டை READY PANNI VELUNGGA IVANAI
ipf தலைவர் சம்பந்தன் வழக்கம்போல பாரிசான் வெற்றியை
உறுதி செய்ய வேண்டும் என்று அறிக்கை விடுவாரே.
முதலில் நீங்கள் எத்தனை முறை தெலுக் இந்தான் மக்களின் பிரைச்சனைகளை கேட்க வந்திருகிரிர்கள் ,இதே கதைய தான் காஜங்கில் பிரசாரம் செய்திர்கள் , ஆனால் நீங்கள் கண்டது தோல்வி முதலில் நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் மெலவதி தமிழ் பள்ளிக்கு முன்று வருடத்துக்கு முன் கொடுத்த வாக்குறுதியை காப்பற்றுங்கள் .அப்படி இல்லை என்றல் நாங்கள் iஇந்த பிரச்சனையை தெலுக் இந்தனில் பொது மக்களிடம் தெரிய படுத்துவோம் .ஒன்று தெரிந்து கொள்ளுங்கள் இப்பொழுது உங்களுக்கு எதிரி என்னை போல ம இ க காரர்கள் என்று தெரிய படுத்தா விரும்பிகிறேன் .
ம இ கா காரனுங்க ஓட்டையே முழுசா பெற முடியாது ஐயா! அப்புறமெங்கே 70%
மஇகா 70 விழுக்காடு இந்திய வாக்காளர்களின் ஆதரவைத் திரட்டும் ? கிழிக்கும் ! ப… பயல்கள ,,இப்படியே சொல்லி சொல்லி காணமல் தான் போயிட்டேங்க ,து…பயல்கள
நல்லா ஏமாற போகுது umno . மா இ கா, மலேசியா தமிழர்களை எமாற்றியது போதாது என்று, மீண்டும் ஒரு முறை umno வையும் எமாற்றும் ! பாவம் umno . ஏமாந்து ஏமாந்து , ஒரு நாளைக்கு துப்பாக்கி எடுத்து எல்லா ம இ கா பய புள்ளையும் சுட்டு தள்ள போறான் !! அப்பா தெரியும் இந்த ஏமாத்து வேலைக்கு என்ன கூலின்னு !