தெலுக் இந்தான் நாடாளுமன்ற இடைத்தேர்தலில் பிஎன் வேட்பாளராக கெராக்கான் கட்சியின் தலைவர் மா சியு கியோங் களமிறங்குகிறார்.
இன்று பின்னேரத்தில் தெலுக் இந்தானில் பிஎன் வேட்பாளராக மா சியு கியோங் போட்டியிடுவார் என்று துணைப் பிரதமர் முகைதின் யாசின் அறிவித்தார்.
மா சியு கியோங் இத்தொகுதியை 1999 லிருந்து 2008 ஆம் ஆண்டு வரையில் தம் வசம் வைத்திருந்தார். 2008 ஆம் ஆண்டில் டிஎபியின் எம். மனோகரன் அவரை குறுகிய வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
மா மீண்டும் 2013 இல் அத்தொகுதியில் போட்டியிட்டு டிஎபியின் சியா லியோங் பெங்கிடம் 7,313 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி கண்டார்.
சியா கடந்த மே 1 இல் புற்றுநோயின் காரணமாக காலமானதைத் தொடர்ந்து இத்தொகுதி காலியாகியுள்ளது.
அரசியலுக்கு புதியவரான டிஎபியின் டியானா சோபியாவுடன் மா, 53, இப்போது மோதவிருக்கிறார்.
மா உங்களுக்கு தோல்வி நிச்சயம் , அதுதான் பழகி போயிருசே
நேற்றைய தினம் நான் தெலுக் இந்தானில் தான் இருந்தேன். மா சியு கியோங்கைப் பற்றி யாரும் குறை கூறியதை நான் கேட்டதில்லை. டி.எ.பி. வெற்றிபெறுவதை நாம் விரும்புகிறோம். அதே வேளையில் மக்களுக்கு சேவை செய்பவர்கள் வெற்றிப்பெருவதை நம்மால் தடுக்க முடியாது.
மாஹ் சிவ் சிஒங்க் ரோச்மாஹ் சம லு சம சஹஜ டக் பொலெஹ் பகை
உம பருப்பு இப்போ வேகாது ஐயா. என் என்றால்…. நீர் சேந்து இருக்கும் கூட்டு சரி அற்றது. வீண் மானக்கேடு வேண்டாவே! டவிர்டிருக்கலாமே!! கிணறு என்று தெரிந்தும் குதிக்க துணிதல் முட்டாள் தனம் அல்லவோ!! 🙂
கிணத்தை கிளறி விட்டு இனத்துக்கு மீன் பிடிக்க நினைப்பதும் இன அரசியல் தான் ..குழம்பிய குட்டையில் தவளையும் மாட்டும் என்ற நினைப்பில் இன்னும் 3 ஆண்டுகளுக்கு சீனர் BN நில் அறுவடை நாடகம்?