சிஎம்: பெண்ணாக இருந்துகொண்டு பெண்ணையே குறை சொல்கிறார் ஷரிசாட்

sharizatஅம்னோ  மகளிர்  பகுதி  “மட்டமாக  நடந்துகொண்டு”  அரசியலில்  ஈடுபடும் பெண்களின்  ஊக்கத்தையே  கெடுக்கிறது  எனச்  சாடுகிறார்  பினாங்கு  முதலமைச்சர்  லிம்  குவான்  எங்.

ஆண்கள்தான்  நேர்மைக்குறைவாக  நடந்துக்கொள்வார்கள்  என்று  நினைத்தால்  பெண்களும்  சளைத்தவர்கள்  அல்லர்  என்றாரவர்.

“எங்களின்  தெலோக்  இந்தான்  வேட்பாளர்  டியானா  சோஃப்யா முகம்மட்  டாவுட் வெறும் அழகுப்பொருளாம்,  ஒரு  கைப்பாவையாம்.

“சொன்னவர்  யார்? அம்னோ  மகளிர்  தலைவரே  அப்படிச்  சொல்லி  இருக்கிறார்”, என்று  லிம்  கூறினார்.

டிஏபி  தன்னை  ஒரு  கைப்பாவையாக  பயன்படுத்துவதை  டியானா  அறியார்  என  ஷரிசாட்  அப்துல்  ஜலில்  கூறியதாக  மலாய்மொழி  செய்தித்தாளான  கோஸ்மா  அறிவித்துள்ளது.

“பெண்கள்  அதிக  எண்ணிக்கையில்  அரசியலில்  ஈடுபட  வேண்டும்  என  விரும்பினால் அவர்களை  ஊக்குவிக்க  வேண்டும், கிண்டல்  பண்ணக்கூடாது,  மட்டமாக  பேசக்கூடாது,

“எங்கள்  மகளிரின்  ஆற்றலைக்  குறைத்து  மதிப்பிடாதீர்கள்”, என்று  லிம்  குறிப்பிட்டார்.