தேச நிந்தனைச் சட்டம் இரத்துச் செய்யப்படும் என்ற பிரதமரின் உறுதிமொழி என்னவானது?

suhakamபொதுத்  தேர்தலுக்குமுன்  1948ஆம்  ஆண்டு தேச  நிந்தனைச்  சட்டம்  அகற்றப்படும்  எனப்  பிரதமர்  நஜிப்  அப்துல்  ரசாக்  அளித்த  வாக்குறுதியை  நினைவுபடுத்திய  மலேசிய  மனித  உரிமை  ஆணையம் (சுஹாகாம்),  அவர்  அந்த உறுதிமொழியை  நிறைவேற்ற  வேண்டும்  என வலியுறுத்தியுள்ளது.

அச்சட்டம்  நீக்கப்பட்டு  அதனிடத்தில் தேசிய  நல்லிணக்கச்  சட்டம்  கொண்டுவரப்படும்  எனப்  பிரதமர்  அறிவித்தார்  என்று  அந்த  ஆணையம்  குறிப்பிட்டது.

“அரசாங்கம் குடிமக்களின்  அடிப்படை  பேச்சுரிமையை  நிலைநிறுத்தவும்  பாதுகாக்கவும்  இச்சட்டத்தைக்  கொண்டுவந்து  அதன்  கடப்பாட்டை  நிறைவேற்ற வேண்டுமாய்  ஆணையம்  கேட்டுக்கொள்கிறது”,  என  சுஹ்காம்  தலைவர்  ஹஸ்மி  அகாம்  ஒர்  அறிக்கையில்  கேட்டுக்கொண்டிருக்கிறார்.