புதிய நெடுஞ்சாலையால் சிலாங்கூர் நீர் நெருக்கடி மோசமாகும்

water1கிழக்கு  கிள்ளான்  பள்ளாத்தாக்கு  விரைவுச்சாலை(இகேவிஇ)க்காக  சிலாங்கூரின்  பாதுகாக்கப்பட்ட  காட்டுப்  பகுதிகளை  அழிப்பதால்  மாநிலத்தின்  குடிநீர்  பிரச்னை  மேலும்  மோசமடையும்  எனச்  சுற்றுச்சூழல்  அமைப்புகளின்  கூட்டணி ஒன்று  எச்சரித்துள்ளது.

இகேவிஇ-யால்  பாதிக்கப்படும்   இரண்டு  பகுதிகள்  அம்பாங்,  உலு  கோம்பாக்  காடுகளாகும்.  இரண்டுமே  முக்கியமான  நீர்ப்  பிடிப்புப்  பகுதிகளாகும்  என  சிலாங்கூர்  மாநில பூங்கா பாதுகாப்பு  கூட்டமைப்பு  நேற்று  ஓர்  அறிக்கையில்  கூறியது.

“வளர்ச்சி  என்ற  பெயரில்  மேன்மேலும்  நீர்ப் பிடிப்புப்  பகுதிகளைக்  காலிசெய்து  கொண்டுபோனால்  எதிர்காலத்தில் நீரின்  அளவு  குறைந்துவிடும்”,  என்று  அது  எச்சரித்தது.