‘கட்டைப் பிரம்மச்சாரி நான், பொண்ணு இருக்கா’: ராம்கர்பால் கிண்டல் பேச்சு

ram1நேற்றிரவு  ஒரு  விருந்தில்  கலந்துகொண்ட  ராம்கர்பால்  சிங்,  புக்கிட்  குளுகோர்  இடைத்  தேர்தல்  முடிந்ததும்  டிஏபி  மகளிர்  தமக்குப்  பொருத்தமான  ஒரு  பெண்ணைத்  தேடுவதற்கு  உதவினால்  நன்றாக  இருக்கும்  என்று  கூறிக்  கூட்டத்தினரைத்  திகைப்பில்  ஆழ்த்தினார்.

“நான்  தனியாள். புக்கிட்  குளுகோரை  அடுத்து  எனக்குப்  பெண்  தேடும்  படலாம்  தொடங்கலாம்”, என்றாரவர்.

“எந்த  மனிதருக்கும்,  எந்தப்  பெரிய  மனிதருக்கும்  பின்னே  ஒரு மிகப்  பெரிய  பெண்மணி  இருப்பார்  என்பதை  நம்புகிறவன்  நான்”,  என்றவர்  சொன்னதைக்  கேட்டுக்  கூட்டத்தினர்  மகிழ்ச்சியில்  கைதட்டி  ஆரவாரம்  செய்தனர்.

பினாங்கு  ஹன் சியாங்  கல்லூரி  மண்டபத்தில்  நடைபெற்ற  அவ் விருந்தில்  மாநில முதல்வரும்  டிஏபி  தலைமைச்  செயலாளருமான  லிம் குவான்  எங்,  மாநிலக்  கட்சித்  தலைவர்  சொங்  எங், பெண்  எம்பிகள்,  சட்டமன்ற  உறுப்பினர்கள்  முதலியோர்   கலந்துகொண்டனர்.