மலேசிய பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், குறைகூறல்களை ஏற்கக் கற்றுக்கொள்ள வேண்டும், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மிரட்டக் கூடாது என்று ரிப்போர்டர்ஸ் வித்தவுட் போர்டர்ஸ் (ஆர்எஸ்எப்) கூறியுள்ளது.
ஊடகச் செய்திகள் பிடிக்கவில்லை என்றால் அதை வெளிப்படுத்த தலைவர்களுக்கு எத்தனையோ வழிமுறைகள் உள்ளன என்று உலக முழுவதும் பத்திரிகைச் சுதந்திரத்துக்காகவும் செய்தியாளர் உரிமைக்காகவும் போராடும் பிரான்சில் தளத்தைக் கொண்டுள்ள அந்த என்ஜிஓ கூறியது.
“செய்தி ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என ஒரு பிரதமரின் சார்பாக மிரட்டுவது தகவல் உரிமைக்கு விடுக்கப்படும் ஒரு மிரட்டலாகும்”, என ஆர்எஸ்எப்-இன் ஆசிய, பசிபிக் பிரிவுத் தலைவர் பெஞ்சமின் இஸ்மாயில் அதன் வலைத்தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
நஜிப் தன கடவுளாம அவனை குறை சொள்ளதேங்கப்ப இவனை போல கேடு கேட்டவன் எவனும் இல்லை நாட்டிலே
சின்ன பிள்ளைதான் இன்னும் பல வருடங்கள் காத்திருக்கவேண்டும் .