நிந்தனை கருத்துகள் கூறிய ஈக்காத்தான் முஸ்லிமின் மலேசியா (இஸ்மா) தலைவர் அப்துல்லா ஜெய்க் அப்ட் ரஹ்மானுக்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்ற குறைகூறலை மறுத்த போலீஸ், நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகக் கூறுகிறது.
இரண்டு வாரங்களுக்குமுன் அப்துல்லா ஜெய்க்கிடம் வாக்குமூலம் பதிவுசெய்யப்பட்டது எனக் கோலாலும்பூர் குற்றப் புலன் விசாரணைத் துறை (சிஐடி) தலைவர் கான் கொங் மெங் தெரிவித்ததாக த ஸ்டார் கூறியது.
“நாங்கள் எம்சிஎம்சி (மலேசிய தொடர்பு, பல்லூடக ஆணையம்), சிசிஐடி (வணிகக் குற்றப் புலன் விசாரணைத் துறை) சைபர் பாதுகாப்புப் பிரிவு ஆகியவற்றின் அறிக்கைகளுக்காகக் காத்திருக்கிறோம்.
“அவை கிடைத்ததும் மேல்நடவடிக்கைக்காக விசாரணை அறிக்கைகள் சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திடம் தாக்கல் செய்யப்படும்”, என்றாரவர்.
இசம நஜிப் பெனசிஹட் உடம
நஜிப்தான் இச்மாஹ்வை ஆதரிப்பவன் போலிஸ் சும்மா மக்களை நய்யாண்டி பண்ணுகிறான் பாரு.
இந்நேரம் “உள்ளே” தள்ளியிருந்தால் நம்பலாம். இனிமே நம்ப முடியாது!
இதெல்லாம் கண் துடைப்பு
நம்பிட்டோம்………!!!!!!